சமையல் குறிப்புகள்! ‘கடப்பா’ என்ற குழம்பு வகை
தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இட்லி மற்றும் தோசைக்குத் தொட்டுக் கொள்ள ‘கடப்பா’ என்ற குழம்பு வகையைச் செய்கிறார்களே. அதன் செய்முறை! உருளைக் க...

https://pettagum.blogspot.com/2011/02/blog-post_3375.html
தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இட்லி மற்றும் தோசைக்குத் தொட்டுக் கொள்ள ‘கடப்பா’ என்ற குழம்பு வகையைச் செய்கிறார்களே. அதன் செய்முறை!
உருளைக் கிழங்கு அரை கிலோ, பயத்தம் பருப்பு கால் கிலோ, இரண்டையும் தனித் தனியாக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, சிறிது சோம்பு தாளித்து, 1 டீஸ்பூன் பூண்டு விழுதைப் போட்டு வதக்கி, பிறகு 2 பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, தேங்காய்க் கரைசல் அரை கப், ஊற்றிக் கொதிக்க விடவும். 2 பச்சை மிளகாயையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். கிரேவி நன்கு கொதித்து வரும்போதே வேக வைத்த உருளைக் கிழங்கை உதிர்த்துப் போட்டுக் கிளறி, வெந்த பயத்தம் பருப்பையும் போட்டு கொதிக்க விட்டு, மேலாக கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவினால் கடப்பா ரெடி!
Post a Comment