சமையல் குறிப்புகள்! பனீர் பக்கோடா நான்-ஸ்டாப் கொண்டாட்டம்தான்!
தேவையானவை: பால்-2 லிட்டர், மைதா மாவு-பனீரின் அளவு, வெங்காயம், மிளகாய், மல்லி, கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது சேர்த்து)-பனீர் அளவு, ரீஃபைண்...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_3993.html
தேவையானவை: பால்-2 லிட்டர், மைதா மாவு-பனீரின் அளவு, வெங்காயம், மிளகாய், மல்லி, கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது சேர்த்து)-பனீர் அளவு, ரீஃபைண்ட் ஆயில், ஒரு எலுமிச்சம் பழம், தேவையான அளவு உப்பு.
பாலைக் காய்ச்சி, அதில் எலுமிச்சம் பழம் பிழிந்து திரித்து, ஒரு துணியில் கட்டி, தண்ணீரை நன்றாக வடியவைக்க கிடைப்பதே பனீர். பின்பு இந்தப் பனீரை நன்றாக உலர்த்தி, மாவு, வெங் காயம், மிளகாய், மல்லி , கறிவேப்பிலை, உப்புத் தூள் சேர்த்துப் பிசைந்து, காய்ந்த எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாகப் போட்டு பொன் நிறமாகப் பொரித்து எடுக்கவும். பிறகு சாப்பிட ஆரம்பித்தால், நான்-ஸ்டாப் கொண்டாட்டம்தான்!
Post a Comment