சமையல் குறிப்புகள்! ரெடிமேட் மிக்சட் மாவு

ஐந்தே நிமிடத்தில் அசத்தல் சமையல்! எப்பேற்பட்ட அவசரத்திலும் இந்தப் பொடியை வைத்து உடனடியாக பலவகை டிஷ்களை செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம். சு...

ஐந்தே நிமிடத்தில் அசத்தல் சமையல்! எப்பேற்பட்ட அவசரத்திலும் இந்தப் பொடியை வைத்து உடனடியாக பலவகை டிஷ்களை செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம். சுவையோடு சத்துக்களையும் அள்ளி வழங்கும் இந்தப் பொடியை செய்வதும் மிக எளிது. தேவையானவை: நிலக்கடலை மாவு & ஒரு கப், சோயா மாவு & ஒரு கப், சோளமாவு & ஒரு கப், பொட்டுக்கடலை மாவு & ஒரு கப், சேமியா மாவு & ஒரு கப், வறுத்த அவல் பவுடர் & ஒரு கப், வறுத்து பொடித்த ஜவ்வரிசி & ஒரு கப், வறுத்துப் பொடித்த ரவை & ஒரு கப், வறுத்த மைதா மாவு & ஒரு கப், வறுத்த கடலை மாவு & ஒரு கப், வறுத்த கோதுமை மாவு & ஒரு கப், வறுத்த பச்சரிசி மாவு & ஒரு கப், வறுத்த புழுங்கல் அரிசி மாவு & ஒரு கப். செய்முறை: எல்லாவற்றையும் கலந்து வைத்துக்-கொண்டால் கீழ்க்காணும் ‘டிஷ்’களையெல்லாம் உங்கள் அருமை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.. ஒரு கப் மாவுடன் ஒன்றரை கப் சர்க்கரைத்தூள், சிறிது ஏலத்தூள் கலந்து நெய் விட்டு உருண்டைகளாக பிடிக்கலாம். ஒரு கப் மாவுடன், ஒரு கப் துருவிய வெல்லம் சேர்த்து தேங்காய்த் துருவல் கலந்து ‘லாடு’ போல் செய்து தரலாம். வெல்லப்பாகில், மாவை போட்டு கிளறி, பிளாஸ்டிக் கவரில் தட்டி, தோசைக்கல்லில் சிறிது நெய் விட்டு சுட்டால் திடீர் போளி ரெடி! மாவை நெய்யில் வறுத்து, பால் விட்டுக் கிளறி சர்க்கரை சேர்த்து ‘அல்வா’ போலவும் கிண்டலாம். ஒரு கப் மாவில் 4 டீஸ்பூன் நெய் விட்டு, வறுத்து அரை லிட்டர் பாலில் வேகவிட்டு சர்க்கரை சேர்த்து இறக்கவும். பிரமாதமான ‘பிரதமன்’ ரெடி! மாவில் தண்ணீர் தெளித்துப் பிசறி, ஆவியில் வேகவிட்டு இறக்கவும். அதில், நெய்யில் வறுத்த தேங்காய் துருவல், ஏலப்பொடி, சர்க்கரைத்தூள் கலந்து இனிப்புப் புட்டு செய்யலாம். அதே மாவை தண்ணீர் சேர்த்து பிசறி, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து ஆவியில் வேகவிட்டு எடுத்தால், ‘காரபுட்டு’ ரெடி!. இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு அரைத்து மோரில் கலந்து கொள்ளவும். இதில் மாவை கொட்டி பிசைந்து பிளாஸ்டிக் பேப்பரில் தட்டி, ரொட்டிபோல் சுட்டு சாப்பிடலாம். தேங்காய் பாலில், மாவைக் கரைத்து சிட்டிகை உப்பு, சர்க்கரைத்தூள் சேர்த்து இனிப்பு தோசை சுடலாம்.

Related

சமையல் குறிப்புகள் 8719545442114045211

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item