சமையல் குறிப்புகள்! கருணைக்கிழங்கு சாப்ஸ் கறி
தேவையான பொருட்கள் : கருணைக்கிழங்கு - ¼ கிலோ, பெரிய வெங்காயம் - 2, பட்டை, சோம்பு, கடுகு - சிறிதளவு, தக்காளி - 3, மஞ்சள் தூள் - சிறிதளவு, மி...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_4953.html
தேவையான பொருட்கள் :
கருணைக்கிழங்கு - ¼ கிலோ, பெரிய வெங்காயம் - 2, பட்டை, சோம்பு, கடுகு - சிறிதளவு, தக்காளி - 3, மஞ்சள் தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - காரத்திற்கேற்ப, மிளகு - ¼ டீஸ்பூன், தேங்காய் - ¼ மூடி, சீரகம் - ¼ டீஸ்பூன், எண்ணெய் - 150 கிராம், கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு, உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை :
கருணைக்கிழங்கை ஒரு இன்ச் நீளத்திற்கு சதுரமாக நறுக்கி, சுத்தமாக கழுவி, அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் போட்டு பிசறி வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் 50 கிராம் ஊற்றி கிழங்கை பொன்னிறமாக வறுத்துத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் 100 கிராம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு, கடுகு போட்டு வெடித்ததும், மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு சிவக்க வறுக்கவும்.
இதில் வறுத்த கிழங்கைப் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாதூள், உப்பு போட்டு கிளறிய பிறகு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
இது நன்கு கொதி வந்தவுடன், தேங்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொண்டு அதை கிரேவியில் ஊற்றிக் கொதிக்க விடவும். பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும். மிகவும் டேஸ்ட்டியான, வித்தியாசமான ரெசிபி இது.
Post a Comment