தேவையானவை: பாசிப்பயறு & 1 கப், பச்சை மிளகாய் & 2, இஞ்சி & 1 துண்டு, உப்பு & தேவைக்கு, எண்ணெய் & தேவைக்கு. தாளிக்க: சீரகம...

தேவையானவை: பாசிப்பயறு & 1 கப், பச்சை மிளகாய் & 2, இஞ்சி & 1 துண்டு, உப்பு & தேவைக்கு, எண்ணெய் & தேவைக்கு. தாளிக்க: சீரகம் & டீஸ்பூன், வெங்காயம் & 3, உப்பு & சிட்டிகை, எண்ணெய் & 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் & 2.
செய்முறை: பாசிப்பயறை 3 & 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு நன்கு கழுவி களைந்து பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு அரைக்கவும். உப்பு சேர்த்து கரைக்கவும். (இந்த மாவு நுரை போலிருக்கும்).
மிளகாய், வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். எண்ணெயை காய வைத்து சீரகம் தாளித்து வெங்காயம், மிளகாய் உப்பு சேர்த்து சிறிது வதக்கி எடுக்கவும். தோசைக்கல்லை காய வைத்து ஒரு கரண்டி மாவெடுத்து மெல்லிய தோசையாக தேய்க்கவும். அதன் மேல் வெங்காயக் கலவையை சிறிது தூவி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி நன்கு வேக விட்டு மடித்து எடுக்கவும். இஞ்சி துவையலுடன் பரிமாறவும். ஆந்திரா என்றதும் நினைவுக்கு வரும் விஷயங்களில் பெசரட்டும் ஒன்று.
பாம்பே ரவையை உப்புமா செய்து, அதில் சிறிதளவை பெசரட்டின் நடுவில் வைத்து எடுத்து அதனுடனேயே சேர்ந்தாற்போல் சாப்பிடுவது வேறுவிதமான சுவை.
Post a Comment