சமையல் குறிப்புகள்! மட்டன் கைமா வடை
கைமா வடை மட்டன் கைமா --200 கிராம் கடலை பருப்பு --50 கிராம் இஞ்சி --25 கிராம் வெங்காயம் --1(நீளவாக்கில் நறுக்கியது) பூண்டு --10 பல் ஏலக்காய...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_6828.html
கைமா வடை
மட்டன் கைமா --200 கிராம்
கடலை பருப்பு --50 கிராம்
இஞ்சி --25 கிராம்
வெங்காயம் --1(நீளவாக்கில் நறுக்கியது)
பூண்டு --10 பல்
ஏலக்காய் --1
பட்டை --1துண்டு
சிவப்பு மிளகாய் --6
முழு தனியா --1ஸ்பூன்
உப்பு --தேவையான அளவு
எண்ணெய் --2ஸ்பூன்
முட்டை --1
எண்ணெய் --பொரிப்பதற்கு தேவையான அளவு
கடாயில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் மட்டன் கைமாவை போட்டு லேசாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கடலைபருப்பு, இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது, சிவப்பு மிளகாய், ஏலக்காய், பட்டை, முழு தனியா, வெங்காயம் இவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி பின் அது மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி மூடி வைத்து நன்கு வேகவைக்க வேண்டும்.
அவை நன்கு வெந்து நீர் வற்றி பொலபொலவென்று ஆனவுடன் இறக்கி சூடாக இருக்கும்போதே மிக்ஸியில் லேசான கொரகொரப்புடன் அரைக்கவேண்டும். அவ்வாறு அரைத்ததை சிறு உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தட்டி அதன் மத்தியில் ஒரு முந்திரிப்பருப்பை வைக்க வேண்டும்.
அந்த முந்திரிப் பருப்பு விழாமல் இருக்க அடித்த முட்டையில் பருப்பை நனைத்து அதில் ஒட்ட வேண்டும். பின் அந்த வடையை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
Post a Comment