எலுமிச்சம் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

உணவே மருந்து : எலுமிச்சம் பழம் நோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் ...

உணவே மருந்து : எலுமிச்சம் பழம் நோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழம் புளிப்பு சுவை கொண்டது. புளிப்பு சுவையுள்ளவை ஜீரணத்தை தூண்டி உணவை நன்கு செரிக்க செய்யும். உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மையும், புளிப்பு சுவைக்கு உண்டு. எலுமிச்சை புளிப்பு சுவையுடையதாக இருந்தாலும், இதில் காரத்தன்மையும் இருக்கிறது. அதனால் ரத்தத்தை தூய்மை செய்யும் சிறப்பு இதில் இருக்கிறது. எலுமிச்சை பழத்தில் உள்ள ``சிட்ரிக் அமிலம்'' நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாக இருப்பதால் சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளுக்கு நல்ல மருந்தாகிறது. எலுமிச்சை சாறுக்குபித்தநீரை சுரக்கும் தன்மை உண்டு. அதனால் காமாலை நோய் களுக்கும் இது மருந்தாக பயன்படுகிறது. ரத்தப் போக்கை தடுத்து நிறுத்தும் சக்தி எலுமிச்சை சாறுக்கு உள்ளதால் மூக்கில் ரத்தம் வடிதல், மூலநோயில் உண்டாகும் ரத்தக் கசிவு போன்ற நிலைகளில் இது பலனளிக்கிறது. உடலில் காற்றை சீராக்கி இயக்கும் தன்மை எலுமிச் சைக்கு உண்டு. இதனால் எலுமிச்சை சாறு பருகினால் இதயம், நுரையீரல் போன்றவை நன்றாக இயங்கும். மலை ஏற்றம் செல்பவர்கள், எலுமிச்சம் சாற்றை நீரில் கலந்து குடித்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும், களைப்பு நீங்கும். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கும். அதனால் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களும், மன பதட்டம் கொண்டவர்களும் எலுமிச்சை சாறில் நீர் கலந்து பருகலாம். கழிவுகளை வெளியேற்றும் தன்மை வாய்ந்ததால் முக பருவால் துன்பப்படும் இளம் பருவத்தினர், ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 சிட்டிகை மிளகு தூள், 2 தேக்கரண்டி தேன் கலந்து பருக வேண்டும். இதனால் ரத்தத்தில் காரத் தன்மை அதிகரிக்கும். அதை தொடர்ந்து கழிவுகள் வெளியேறி, ரத்த ஓட்டம் சீர்படும். முகப்பரு போன்றவைகளும் மறையும். மலச்சிக்கல் உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் இளம் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் மலச் சிக்கல் நீங்கும். உடல் புத்துணர்ச்சி பெறும். நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுப்பவர்கள் பருகும் நீரில், 1 கப்புக்கு 1 தேக்கரண்டி என்ற அளவில் எலுமிச்சை சாறு கலந்து அடிக்கடி குடித்து வந்தால், ரத்தத்தின் காரத்தன்மை அதிகரித்து நோய் பாதிப்பு விரைவில் சீராகும். உடலுக்கு புத்துணர்ச்சியும் மனதிற்கு தெளிவும் கிடைக்கும். கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, சொறி, சிறங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்களிலிருந்து விடுபட எலுமிச்சை சாற்றை உடலில் தேய்த்து சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்றிருந்துவிட்டு பின்பு குளிக்கவேண்டும். கோடை காலத்தில் உடல் புத்துணர்ச்சி பெற குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, குளிக்க வேண்டும். எலுமிச்சையை மழை, கோடை, பனி போன்ற எல்லா காலங்களிலும் உபயோகிக்கலாம். எலுமிச்சை சாறை காய்கறிகளில் கலந்து சாலட் ஆக செய்யும் பொழுது, அந்த காய்கறிகளின் சத்து அதிகரிக்கிறது.

Related

மாதுளைச் சாறு --சோர்வு அழுத்தம் போக்க மிகச் சிறந்த பானம்.

சோர்வு அழுத்தம் என்பனவற்றைப் போக்க மாதுளைச் சாறு மிகச் சிறந்த பானம்-ஆய்வு அலுவலகங்களில் வேலை செய்யு...

வாழையின் மகத்துவம்! மருத்துவக் குணங்கள்

வாழையின் மகத்துவம்! இந்திய தேசத்தின் கலாச்சாரத்தில் வாழைக்கு முக்கிய பங்கு உண்டு. விழாக்களிலும் வா...

புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்! – நாட்டு வைத்தியம்

புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்! இயற்கையா விளையுறத சாப்பிட்டு வந்தா… நோய் நொடியில்லாம வாழறதுக்கான வழி மட்டுமில்ல… வந்த நோய்களை விரட்டி அடிக்கறதுக்கான வழியும் கிடைக்கும். உதாரணத்துக்கு எத்தனையோ ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Thursday - Nov 28, 2024 1:22:28 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,379

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item