சமையல் குறிப்புகள்! ஈஸி அப்பம்--அப்பம்
ஈஸி அப்பம் தேவையான பொருட்கள்: மைதா மாவு -1 கப், அரிசி மாவு-கால் கப், வெல்லம்-1 கப், வாழைப்பழம்-1, தேங்காய்-கால் கப், எண்ணெய் (அ) நெய் தேவை...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_6897.html
ஈஸி அப்பம்
தேவையான பொருட்கள்: மைதா மாவு -1 கப், அரிசி மாவு-கால் கப், வெல்லம்-1 கப், வாழைப்பழம்-1, தேங்காய்-கால் கப், எண்ணெய் (அ) நெய் தேவையான அளவு.
செய்முறை: வெல்லத்தைத் தண்ணீரில் கரைய விட்டு வடிகட்டிக் கொள்ளவும். மைதா மாவு, அரிசி மாவு, ஏலக்காய்த் தூள் சேர்த்து, கட்டி இல்லாமல் வெல்லத் தண்ணீரை விட்டுக் கரைத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை நன்கு மசித்து சேர்த்துக் கரைத்துக் கொண்டு வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, ஒவ்வொரு கரண்டியாக அப்பம் வார்த்து திருப்பிப் போட்டு நெய் விட்டுச் சிவக்க எடுக்கவும். குழிப்பணியாரச் சட்டியில் ஊற்றியும் எடுக்கலாம்.
அப்பம்
தேவையான பொருட்கள்: பச்சைஅரிசி-2 ஆழாக்கு, புழுங்கல்அரிசி-அரை ஆழாக்கு, உளுத்தம்பருப்பு -அரை ஆழாக்கு, வெந்தயம்-1 ஸ்பூன், ஏலம், சுக்கு சிறிதளவு, தேங்காய்-1 மூடி, வெல்லம் 3 ஆழாக்கு.
செய்முறை: அரிசிகள், பருப்பு, வெந்தயம் இவற்றைச் சுத்தம் செய்து ஊற வைக்கவும்.வெல்லத்தைத் தூள் செய்தும், தேங்காயைத் துருவிக் கொண்டும், ஏலம், சுக்கைப் பொடி செய்தும் வைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்துள்ள அரிசி_பருப்புக் கலவையை அரைக்கவும். நைசாக அரைபட்டு வரும்போது, தூள் செய்துள்ள வெல்லத்தைச் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். நைசானவுடன் தேங்காய்த் துருவலையும் சுக்கு ஏலப்பொடியையும் சேர்த்து, மேலும் இரண்டு சுற்று சுற்றி பின் எடுத்துவிடவும். இந்த மாவை சிறிது நேரம் வைத்திருந்து அப்பமாக ஊற்றினால் நன்றாக வரும். எண்ணெய், நெய், ரீபைண்ட் ஆயில் எதில் வேண்டுமானாலும் ஊற்றி எடுக்கலாம்
Post a Comment