கருணைக் கிழங்கு சில சமயம் தொண்டையில் காரலை ஏற்படுத்துகிறது. காரல் தெரியாமல் எப்படி மசியல் செய்வது? கருணைக் கிழங்கை தண்ணீரில் கழுவி, பெரிய ...

கருணைக் கிழங்கு சில சமயம் தொண்டையில் காரலை ஏற்படுத்துகிறது. காரல் தெரியாமல் எப்படி மசியல் செய்வது?
கருணைக் கிழங்கை தண்ணீரில் கழுவி, பெரிய துண்டுகளாக வெட்டி சிறிது மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும். இறக்கி வைக்கும் போது சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். பிறகு கருணைக் கிழங்கின் தோலை உரித்து விட்டு துண்டுகளாக நறுக்கவும். சின்ன நெல்லிக்காய் அளவு புளியை எடுத்துக் கரைத்துக் கொண்டு அதில் கருணைக் கிழங்கைப் போட்டு, அத்துடன் 1 கப் வெந்த துவரம் பருப்பைப் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். கரண்டியால் எடுக்கும்படி நன்கு கொதித்ததும், கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு தாளித்து சிறிதாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு மசியலில் கொட்டிக் கலந்து இறக்கவும். பின்னர் அதில் 1 மூடி எலுமிச்சம் பழச் சாறு பிழிந்து பரிமாறினால் காரல் தெரியாது.
Post a Comment