சமையல் குறிப்புகள்! நெத்திலி கருவாடு பொரியல்
நெத்திலி கருவாடு --200கிராம் மிளகாய்த்தூள் --3 டீஸ்பூன் பூண்டு --8பற்கள் சிறிய வெங்காயம் --100கிராம் மஞ்சள் தூள் --1/4 டீஸ்பூன் நெத்திலி கர...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_3715.html
நெத்திலி கருவாடு --200கிராம்
மிளகாய்த்தூள் --3 டீஸ்பூன்
பூண்டு --8பற்கள்
சிறிய வெங்காயம் --100கிராம்
மஞ்சள் தூள் --1/4 டீஸ்பூன்
நெத்திலி கருவாடை தலை, வால் நீக்கி நீரில் ஊற வைத்து மண் போக மூன்று நான்கு தடவை கழுவிக் கொள்ளவும்.
கருவாடை ஒரு பாத்திரத்தில் எடுத்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்புத்தூள் கலந்து பத்து நிமிட நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பூண்டை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி வெங்காயம் சேர்க்கவும். வெங்காயமும் வதங்கியதும் கருவாடு, சிறிதளவு நீர் விட்டு வேகவைக்கவும்.
நீர்வற்றி, கருவாடு வெந்ததும் நன்கு கிளறியபடியே இருந்து கருவாடு வறுபட்டதும் இறக்கவும்.
Post a Comment