தேவையானவை: புழுங்கல் அரிசி - 3 கப், தேங்காய் துருவல் - ஒரு கப், மாங்காய் - 1, உருளைக்கிழங்கு - 2, பெரிய வெங்காயம் - 3, பச்சைமிளகாய் - 10, ...

தேவையானவை: புழுங்கல் அரிசி - 3 கப், தேங்காய் துருவல் - ஒரு கப், மாங்காய் - 1, உருளைக்கிழங்கு - 2, பெரிய வெங்காயம் - 3, பச்சைமிளகாய் - 10, இஞ்சி - சிறுதுண்டு, எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை கொதிக்க வைத்த தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மாங் காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி முதலியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி துருவி தண்ணீரில் போடவும்.
ஊறவைத்த அரிசியை கிரைண்டரில் போட்டு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து தோசைக்கு அரைப்பது போல அரைக்கவும். பாதி அரையும்போது தேங்காய் துருவல், மாங்காய் துருவல் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, உருளைத்துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலக்கவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் கொட்டவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு எடுக்கவும். மொறு மொறு அடை ரெடி.
--------------------------------------------------------------------------------
Post a Comment