சமையல் குறிப்புகள்! சிக்கன், தக்காளி கூட்டு பொரியல்

சிக்கன், தக்காளி கூட்டு பொரியல் தேவையான பொருட்கள்: சிக்கன் -500 கிராம் (எலும்பில்லாதது), பெ.வெங்காயம் நறுக்கியது - ஒரு கப், தக்காளி - 3, ...

சிக்கன், தக்காளி கூட்டு பொரியல் தேவையான பொருட்கள்: சிக்கன் -500 கிராம் (எலும்பில்லாதது), பெ.வெங்காயம் நறுக்கியது - ஒரு கப், தக்காளி - 3, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு-5 பல், மிளகாய்த் தூள்- ஒரு டேபிள் ஸ்பூன், கரம் மசாலாத்தூள்-¼ டீஸ்பூன், மஞ்சள்தூள்-¼ டீஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப, - மல்லித் தழை-½ கப். செய்முறை: சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி சுத்தமாக கழுவி மஞ்சள்பொடி, தேவையான உப்பு சேர்த்து கிளறி மூடி வேகவிடவும். பெரிய வெங்காயத்தையும், தக்காளியையும் சிறு துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும். இஞ்சி, பூண்டை அரைத்து எடுக்கவும். சிக்கன் வெந்ததும் தண்ணீர் இல்லாமல் எடுத்து ஆறவிடவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளியையும் சேர்த்து குழையும் வரை வதக்கவும். பின் மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறவும். இத்துடன் சிக்கனையும் சேர்த்து மெல்லிய தீயில் மூடி அடிக்கடி கிளறி விடவும். வெந்ததும் மல்லி இலையைத் தூவி இறக்கிவிடவும். ------------------------------------------------------------------------------------------- சிக்கன் 65 தேவையான பொருட்கள் : சிக்கன் கால்கள் -12, தயிர் - 4 டேபிள்ஸ்பூன் , தோல் நீக்கி வேக வைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் , எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி அளவு, பெ.வெங்காயம்-2, உப்பு, சன் பிளவர் ஆயில்,நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: சிக்கனை தோல் நீக்கி சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிய விடவும். தண்ணீர் வடிந்ததும் சிக்கன் கால்கள், தயிர், மி.தூள், எலுமிச்சை சாறு, உப்பு எல்லாவற்றையும், சேர்த்து கலந்து மூடி 6 மணி நேரம் ஊற விடவும். ஊறிய பின் ஒரு அகன்ற பாத்திரத்தில் அதை பரவலாக வைத்து மூடி அளவான தீயில் வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி ஒரு ப்ளேட்டில் ஆறவிடவும். ஆறிய சிக்கனை ஒரு வாணலியில் சன் ஃப்ளவர் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைப் பதத்திற்கு பொரிக்கவும். வேறு ஒரு அகன்ற பாத்திரத்தில் மெல்லியதாக நீள வாக்கில் வெட்டிய வெங்காயத்தை சிறிது உப்பு சேர்த்து, அதற்கு தேவையான நல்லெண்ணெய் விட்டு மெல்லிய தீயில் வதங்க விடவும். அரைப்பதம் வதங்கியதும் பொரித்து வைத்த சிக்கன் கால்கள், கறிவேப்பிலையையும் சேர்த்து மூடி, திரும்ப மெல்லிய தீயில் வதங்கவிட வேண்டும். அடிக்கடி கிளறி விடவும். பொன்னிறமாக வெங்காயம் வதங்கி வரும்போது சிக்கன் 65-வை இறக்கி விடவும்.

Related

சமையல் குறிப்புகள் 8920559258372973405

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item