அசத்தல் சமையல்! முந்திரி சிக்கன்
முந்திரி சிக்கன் தேவையான பொருட்கள் : கோழி - ¾ கிலோ, முந்திரி பருப்பு - 200 கிராம், நெய் - 100 கிராம், தக்காளி - ¼ கிலோ, பெரிய பூண்டு - 3,...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6993.html
முந்திரி சிக்கன்
தேவையான பொருட்கள் :
கோழி - ¾ கிலோ, முந்திரி பருப்பு - 200 கிராம், நெய் - 100 கிராம், தக்காளி - ¼ கிலோ, பெரிய பூண்டு - 3, இஞ்சி - 2 பெரிய துண்டு, கரம் மசாலா - 1 ஸ்பூன், சீரகம் - 1 ஸ்பூன், மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன், தனியாத் தூள் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, நறுக்கிய கொத்தமல்லி தழை - 1 கைப்பிடியளவு, உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை : கோழியை சிறு துண்டுகளாக்கி தண்ணீர் விட்டு கழுவி வைக்கவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து இஞ்சியை தோல் நீக்கிக் கொள்ளவும்.
வாணலியை சூடாக்கி நெய்யை ஊற்றி சீரகம் தாளித்து தக்காளியை வதக்கிக் கொள்ளவும். இதில் அரைத்த மசாலா, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை போட்டு சுருள வதக்கிக் கொள்ளவும். மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள், கரம் மசாலா எல்லாவற்றையும் போட்டு வதக்கி தேவையான அளவு சுடுதண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்,
இதில் கோழித் துண்டுகள், உப்பு போட்டு கறி நன்றாக பஞ்சு போல மென்மையாக வேகும்வரை வதக்கி வறுக்கவும்.
நீர் சுண்டினதும் இறக்கி பரிமாறலாம். சூடான சாதத்திற்குச் சுவையான டிஷ்ஷாக சாப்பிட இது மிகவும் ஏற்றது.
Post a Comment