ரசிக்க.. ருசிக்க! பால்கொழுக்கட்டை கேக்
தேவையானவை: புழுங்கலரிசி & ஒரு கப், பால் & இரண்டரை கப், பொடித்த வெல்லம் & 2 கப், சர்க்கரை & 4 டீஸ்பூன், வறுத்த முந்திரிப...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_01.html
தேவையானவை: புழுங்கலரிசி & ஒரு கப், பால் & இரண்டரை கப், பொடித்த வெல்லம் & 2 கப், சர்க்கரை & 4 டீஸ்பூன், வறுத்த முந்திரிப் பருப்பு & 10, சிறிய தேங்காய் & 1, ஏலக்காய்தூள் & ஒரு டீஸ்பூன்.
செய்முறை: அரிசியை ஊறவைத்து, நைஸாக, கெட்டியாக அரைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். பால் காய்ந்துகொண்டிருக்கும்போதே, அரைத்த மாவை தேன்குழல் அச்சில் போட்டு பாலில் பிழிந்து விடவும். ஒரு நிமிடம் வேக விட்டு, கரண்டியால் லேசாக கலக்கிவிடவும். பிறகு, மற்றொரு முறை பிழியவும். இவ்வாறு சில நிமிஷங்கள் இடை வெளி விட்டுவிட்டு, எல்லா மாவை யும் பிழிந்துவிடவும் (இதே போல் செய்தால்தான் கொழுக்கட்டைகள் கரையாமல் இருக்கும்).
வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்த வுடன் வடிகட்டவும். வடிகட்டிய வெல்லப்பாகை வெந்த கொழுக் கட்டையுடன் சேர்க்கவும். தேங்காய்ப்பூ, சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். நன்கு கொதித்து கெட்டியாக வரும்போது இறக்கி ஏலக்காய்தூள், வறுத்த முந்திரி சேர்த்து விடவும். நெய் தடவிய தட்டில் இதைக் கொட்டி வில்லைகள் போடவும். பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடும் இனிப்பு இது. உடலுக்கும் நல்லது.
குறிப்பு: அரைக்கும்போது மாவு தளர்த்தியாக இருந்தால் அச்சில் போட்டு பிழிய முடியாது. துணியில் சிறிது நேரம் உலர்த்தி ஈரம் போனவுடன் பிழியலாம்.
பால்கொழுக்கட்டை கேக்: தேங்காயை அரிசியுடன் சேர்த்து அரைத்தும் கொழுக்கட்டை செய்யலாம். அது ஒரு தனிச்சுவையுடன் இருக்கும்.
----------------------------------------------------------------------
Post a Comment