ரசிக்க.. ருசிக்க! ஸ்டஃப்டு குடமிளகாய் ஸப்ஜி
தேவையானவை: குடமிளகாய் (சிறியது) & 4, சீரகம் & அரை டீஸ்பூன், சீரகத்தூள் & அரை டீஸ்பூன், பெருங்காயம் & 2 சிட்டிகை, பெரிய வெ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_7828.html
தேவையானவை: குடமிளகாய் (சிறியது) & 4, சீரகம் & அரை டீஸ்பூன், சீரகத்தூள் & அரை டீஸ்பூன், பெருங்காயம் & 2 சிட்டிகை, பெரிய வெங்காயம் & 1, பொடியாக நறுக்கிய மல்லித்தழை & சிறிது, மஞ்சள் தூள் & அரை டீஸ்பூன், எண்ணெய் & 2 முதல் 3 டீஸ்பூன், கடலைமாவு & 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி & ஒரு சிறிய துண்டு, பூண்டு & 2 பல், வறுத்த நிலக் கடலைப் பொடி & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு & தேவை யான அளவு, மிளகாய்தூள் & அரை டீஸ்பூன்.
செய்முறை: தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதில் குடமிளகாயை காம்புடன் போட்டு இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு சதை பிய்ந்து போகாமல், வெறும் காம்பையும் அதற்குள் இருக்கும் விதையையும் நீக்கிவிடவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் சீரகம், பெருங்காயம், வெங்காயம் ஆகியவற்றை வதக்கிக்கொள்ளவும். இத்துடன் சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்க்கவும். பூண்டு, இஞ்சியை விழுதாக அரைத்து சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். நன்றாக வதக்கிய பிறகு கடலை மாவைப் போட்டு, அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து கட்டி தட்டாமல் வறுக்கவும். இத்துடன் வறுத்த நிலக்கடலைப் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து ஒரு வதக்கல் வதக்கி அடுப்பை அணைக்கவும், மல்லித்தழையை சேர்க்கவும். இந்த மசாலா கெட்டியாக இருக்கவேண்டும்.
இந்த மசாலாவை காம்பு நீக்கிய குடமிளகாயில் அடைக்கவும். மீண்டும் வாணலியில் எண்ணெய்விட்டு அடைத்து வைத்த குடமிளகாயை நிதானமாக (மசாலா வெளியில் வராமல்) போடவும். வாணலியை மூடி அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து நிறம்மாறும் வரை வதக்கவும். நிதானமாக திருப்பிவிடவும், இப்படியே செய்தால் குடமிளகாய் நன்றாக வெந்து, சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
ஸ்டஃப்டு குடமிளகாய் ஸப்ஜி: வேர்க்கடலைக்குப் பதில் முந்திரி, பாதாம், திராட்சை இவைகளை சேர்த்தால் சற்று வித்தியாசமான இனிப்புச் சுவையுடன் நன்றாக இருக்கும்.
Post a Comment