சமையல் குறிப்புகள்! சூப்பர் சுவையான கோங்குரா மட்டன்
கோங்குரா மட்டன் தேவையான பொருட்கள் மட்டன் - 1/2 கிலோ புளிச்சகீரை - 1 கட்டு காய்ந்த மிளகாய் - 10 மிளகு - 1 டீஸ்பூன் சாம்பார் வெங்காயம் - 20...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_7851.html
கோங்குரா மட்டன்
தேவையான பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
புளிச்சகீரை - 1 கட்டு
காய்ந்த மிளகாய் - 10
மிளகு - 1 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக்கரண்டி
தாளிக்க கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு
செய்முறை
* மட்டனை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும், புளிச்ச கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
* வெங்காயம், தக்காளி நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து அரைக்கவும்.
* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
* இ�போது கீரையை சேர்த்து வதக்கி, தொடர்ந்து வேக வைத்த மட்டனை சேர்க்கவும்.
* அரைத்த விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* கீரை, மசாலா, மட்டன் எல்லாம் சேர்ந்து வெந்து கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும்.
* கோங்குரா மட்டன் சுவைக்க தயார்!
Post a Comment