ரசிக்க.. ருசிக்க! சிக்கன் மிளகு குழம்பு
சிக்கன் மிளகு குழம்பு தேவையான பொருட்கள் : மிளகு 15 இஞ்சி 1 துண்டு மஞ்சள் தூள் 2 டீஸ்பூன் தணியா தூள் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_1926.html
சிக்கன் மிளகு குழம்பு
தேவையான பொருட்கள் :
மிளகு 15
இஞ்சி 1 துண்டு
மஞ்சள் தூள் 2 டீஸ்பூன்
தணியா தூள் 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
வெங்காயம் 1
வெண்ணெய் 100 கிராம்
உப்பு தேவையான அளவு
இவற்றுடன் சிக்கன் துண்டுகள் 5 சிறியவை
எலுமிச்சம் பழச்சாறு
செய்முறை :
மிளகைத் தூள் செய்து மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் கலந்து துவையல் போன்று பிசைந்து கொள்ள வேண்டும் . சிக்கன் துண்டுகளை தண்ணீரில் பத்து நிமிடம் வேக வைக்கவும். பிசைந்து வைத்திருக்கும் மசாலா கலவையையும் சேர்தது நன்றாக கிளறி விடவும். சிக்கனை மிருதுவாக வேகவைத்து இறக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைதது நெய் ஊற்றி, அரிந்த வெங்காயததை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். இறக்கி வைக்கும் சிக்கன் குழம்பை வாணலியில் ஊற்றி, உப்பு சேர்தது நன்றாக கொதிக்க வைக்கவும். சிக்கன் மிளகு குழம்பு தயார்.
Post a Comment