சமையல் குறிப்புகள்! ரைஸ் & தாஸ் டோக்ரி
ரைஸ் & தாஸ் டோக்ரி நீளமான பாஸ்மதி அரிசி- ½ கப், துவரம் பருப்பு - 1 கப், பாசிப் பருப்பு -1 கப், நெய் - 3 டீஸ்பூன், வேர்க்கடலை - 50 கிராம...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_679.html
ரைஸ் & தாஸ் டோக்ரி
நீளமான பாஸ்மதி அரிசி- ½ கப், துவரம் பருப்பு - 1 கப், பாசிப் பருப்பு -1 கப், நெய் - 3 டீஸ்பூன், வேர்க்கடலை - 50 கிராம், சர்க்கரை - 1 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி- ½ டீஸ்பூன்,
லெமன் ஜூஸ் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
சப்பாத்திக்கு : கோதுமை மாவு - 1 கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை : பருப்பு வகைகளை ஒன்றாகவும், அரிசியைத் தனியாகவும் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பருப்புகளை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து, குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். வெந்த பருப்புகளை தனியே ஒரு பேனில் எடுத்துக் கொண்டு, அத்துடன் நான்கைந்து கப் தண்ணீர் ஊற்றி, மறுபடியும் வேக விடவும். அத்துடன் சர்க்கரை, மிளகாய்ப்பொடி இரண்டையும் சேர்க்கவும்.
பருப்பு வெந்து கொண்டிருக்கும் போது, ஊற வைத்த அரிசியை அதோடு சேர்த்து, குறைவான தீயில் வேக விடவும்.
கோதுமைமாவுடன், உப்பு எண்ணெய் சேர்த்து குட்டி குட்டி சப்பாத்திகளாகச் செய்து, டைமன்ட் வடிவில் கட் செய்து, பாதி அளவில் அரிசி வெந்ததும், அதோடு கட் செய்து வைத்திருக்கும் சப்பாத்திகளைச் சேர்க்கவும். அரிசி நன்கு வெந்தாலே போதும், சப்பாத்தி துண்டுகளும் வெந்து விடும். அடுப்பை அணைத்து, இந்தக் கலவையோடு லெமன் ஷ¨ஸை சேர்த்து, சூடாக சாப்பிட்டால், ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி உங்களுக்குக் கிடைக்கும்.
--------------------------------------------------------------------------------
Post a Comment