மலேசியா ஸ்பெஷல்! மலேசிய பராத்தா
மலேசியா ஸ்பெஷல்! மலேசிய பராத்தா தேவையானவை: மைதாமாவு - 2 கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு. உள்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6609.html
மலேசியா ஸ்பெஷல்!
மலேசிய பராத்தா
தேவையானவை: மைதாமாவு - 2 கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு. உள்ளே ஸ்டஃப் செய்யும் பூரணத்துக்கு: மெல்லியதாக, நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் - ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கேரட் - அரை கப், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - கால் கப், நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4, பூண்டு (விருப்பப்பட்டால்) - 4 பல், சோயா சாஸ் - 2 டீஸ்பூன், வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - 2-லிருந்து 3 டேபிள்ஸ்பூன், முளைப்பயறு - ஒரு கைப்பிடி.
செய்முறை: எண்ணெயை காயவைத்து, பூரணத்துக்குக் கொடுத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேருங்கள். 3 நிமிடம் வதக்கி இறக்குங்கள். இதுதான் பராத்தாவுக்குள் ஸ்டஃப் செய்யும் பூரணம்.
இனி, மைதாவை உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டி, அதன் நடுவில் பூரணக் கலவையை நிரவுங்கள். பக்கவாட்டில் மடித்து, சதுர வடிவமாக்கிக் கொள்ளுங்கள். தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் ஊற்றி சுட்டெடுங்கள்.
Post a Comment