எளிய முறையில் கொள்ளு சூப்
கொள்ளு சூப் தேவையானவை: கொள்ளு & அரை கப், தக்காளி & 3, எலுமிச்சம்பழச் சாறு & அரை டேபிள்ஸ்பூன், மல்லித்தழை & சிறிது, உப்பு ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5432.html
கொள்ளு சூப்
தேவையானவை: கொள்ளு & அரை கப், தக்காளி & 3, எலுமிச்சம்பழச் சாறு & அரை டேபிள்ஸ்பூன், மல்லித்தழை & சிறிது, உப்பு & சுவைக்கேற்ப, நெய் & 2 டீஸ்பூன். பொடிக்க: மிளகு & ஒரு டீஸ்பூன், சீரகம் & ஒரு டீஸ்பூன், பூண்டு & 2 பல், கறிவேப்பிலை & சிறிது.
செய்முறை: கொள்ளை முதல் நாள் இரவே ஊறப் போடுங்கள். மறுநாள் 3 கப் தண்ணீரை சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள். பிறகு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு, சீரகத்தை நன்கு மைய அரைத்து பூண்டு, கறிவேப்பிலை சேர்த்துத் தட்டியெடுங்கள். நெய்யைக் காயவைத்து, பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேருங்கள். அத்துடன் சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரைத்த விழுது சேர்த்து இன்னும் 3 நிமிடம் வதக்குங்கள்.
கொள்ளு வேகவைத்த தண்ணீரையும் தேவையான உப்பையும் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து பரிமாறுங்கள்.
Post a Comment