சமையல் குறிப்புகள்! "பாசிப்பருப்பு கொத்சு'
பாசிப்பருப்பு கொத்சு! தேவையான பொருட்கள்: வேகவைத்த பாசிப்பருப்பு 2 கப், தேங்காய் துருவல் 2 கப், உருளைக்கிழங்கு 2, வெங்காயம் பொடியாக நறுக்க...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2838.html
பாசிப்பருப்பு கொத்சு!
தேவையான பொருட்கள்:
வேகவைத்த பாசிப்பருப்பு 2 கப், தேங்காய் துருவல் 2 கப், உருளைக்கிழங்கு 2, வெங்காயம் பொடியாக நறுக்கியது
2 கப், தக்காளி 2, கேரட் 2, சிவப்பு மிளகாய் 5, கடுகு 1 டீஸ்பூன், எண்ணெய் 300 கிராம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, சிறிது உப்பு தேவைக்கு.
செய்முறை: தேங்காய் துருவல் மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும்.
தக்காளி, காரட், உருளைக்கிழங்கு அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடிக்க வைத்து சிவப்பு மிளகாய் கிள்ளி போட்டு கருவேப்பிலை போட்டதும் பொடியாக அரிந்த காய்கறிகளையும், வெங்காயத்தையும் போட்டு வதக்க வேண்டும்.
வேக வைத்த பாசிப்பருப்பை கொட்டி உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.
பிறகு தேங்காய் பால் ஊற்றி சூடானதும் இறக்கி வைக்கவும். நல்ல சுவையான, அருமையான இந்த "பாசிப்பருப்பு கொத்சு' இட்லி, தோசை அடைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
Post a Comment