சமையல் குறிப்புகள்! ‘மாயாஜால’ இன்ஸ்டன்ட் ரசம்!
டிப்ஸ்... டிப்ஸ்... திடீர் விருந்தாளிகளை சமாளிக்க, இதோ ஒரு ‘மாயாஜால’ இன்ஸ்டன்ட் ரசம்! பெரிய தக்காளி & 2, ஒரு கைப்பிடி மல்லித்தழை, கொஞ்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_8821.html
டிப்ஸ்... டிப்ஸ்...
திடீர் விருந்தாளிகளை சமாளிக்க, இதோ ஒரு ‘மாயாஜால’ இன்ஸ்டன்ட் ரசம்!
பெரிய தக்காளி & 2, ஒரு கைப்பிடி மல்லித்தழை, கொஞ்சம் கறிவேப்பிலை, அரை டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு மிளகாய் வற்றல் & அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து, இரண்டு டம்ளர் தண்ணீரும், தேவையான அளவு உப்பும் சேர்த்து ஐந்தாறு நிமிடங்கள் கொதிக்க விடவும். அது கொதிக்கும் நேரத்துக்குள் மற்றொரு பக்கம் ஒரு ஸ்பூன் நெய்யில் கடுகு, நசுக்கிய பூண்டு 4 பல் ஆகியவற்றை வதக்கி ரசத்தில் சேர்த்து விடவும். ரசத்தின் மணம் ஊரைக் கூட்டும். இதை சாதத்தில் ஊற்றிப் பிசைந்தும் சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம் (விருப்பப்பட்டால் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கலாம்).
Post a Comment