மலேசியா ஸ்பெஷல்! பபூர் சாச்சா
மலேசியா ஸ்பெஷல்! பபூர் சாச்சா தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2, கெட்டியான தேங்காய்ப்பால் - ஒரு கப், 2-ம் தேங்காய்ப்பால் - 3 கப், வெல...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5144.html
மலேசியா ஸ்பெஷல்!
பபூர் சாச்சா
தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2, கெட்டியான தேங்காய்ப்பால் - ஒரு கப், 2-ம் தேங்காய்ப்பால் - 3 கப், வெல்லம் அல்லது கருப்பட்டி (பொடித்தது) - ஒரு கப் (குவித்து அளக்கவும்), சர்க்கரை - அரை கப்.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி, துண்டுகளாக நறுக்குங்கள். 2&ம் தேங்காய்ப்பாலில் 2 கப் பாலை இதனுடன் சேர்த்து, நடுத்தரத் தீயில் வைத்து விடாமல் கிளறி, வேகவையுங்கள். மீதி இருக்கும் ஒரு கப் 2&ம் பாலில் பொடித்த கருப்பட்டி அல்லது வெல்லம், சர்க்கரையைச் சேர்த்து, கரையும்வரை கொதிக்கவிட்டு வடிகட்டுங்கள். சர்க்கரைவள்ளிக் கிழங்கு வெந்ததும், வெல்லம் கரைந்த பாலை அதில் சேருங்கள். மீண்டும் நன்கு கொதிக்கவிடுங்கள். கிழங்கு ‘மெத்’தென்று வெந்ததும், இறக்கிக் கீழே வைத்து, முதல் பாலை ஊற்றிப் பரிமாறுங்கள். மலேசியர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் இது.
குறிப்பு: மலேசியாவில், நம் ஊரின் ‘பிரிஞ்சி இலை’ போல டவுன்பெண்டாங் இலை என்ற பச்சை இலை ஒன்று கிடைக்கும். அந்த இலையில் ஒரு துண்டு நறுக்கிப் போட்டால், ‘பபூர் சாச்சா’வுக்கு, தனியாக ஒரு மணம் கிடைக்கும்.
‘மைக்ரோவேவ் அவன்’ சமையல்!
Post a Comment