ஆரோக்கிய சமையல்! கறிவேப்பிலைப்பொடி
கறிவேப்பிலைப்பொடி தேவையான பொருட்கள். கறிவேப்பிலை, நல்ல மிளகு, கறுப்பி உளுந்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், இந்துப்பு, சிறிது வெந்தயம். செ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_9375.html
கறிவேப்பிலைப்பொடி
தேவையான பொருட்கள்.
கறிவேப்பிலை, நல்ல மிளகு, கறுப்பி உளுந்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், இந்துப்பு, சிறிது வெந்தயம்.
செய்முறை.
கறிவேப்பிலையை நன்றாகத் தண்ணீரில் அலசி எடுத்து மெல்லிய துணியில் பரப்பி ஈரம் காய உலர்த்தவும். ஒரு டேபிள் ஸ்பூன் கறுப்பு உளுந்து, வெந்தயம், மிளகு, பெருங்காயம், ஆகியவற்றை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கறுவேப்பிலையையும் (உலர்ந்தபின்) வாணலியில் எண்ணெய் விடாமல் வறுக்க வேண்டும். அளவாக இந்துப்பு சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டுப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். சாதத்துடன் கலந்தோ அல்லது பலகாரத்துக்கு தொட்டுக்கொண்டோ சாப்பிடலாம். இது குடல் சம்மந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாகவும் பயன்படும்.
Post a Comment