ரசிக்க.. ருசிக்க! மாங்காய் வடை
மாங்காய் வடை தேவையான பொருட்கள் : அரிசி மாவு - 1 கப், புளிப்பான மாங்காய் - 1, பச்சை மிளகாய் - 2, கடுகு - 1 டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_9081.html
மாங்காய் வடை
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 1 கப், புளிப்பான மாங்காய் - 1, பச்சை மிளகாய் - 2, கடுகு - 1 டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை : மாங்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும்.
வாணலியை சூடாக்கி எண்ணெய் கொஞ்சம் விட்டு கடுகு தாளிக்கவும். அதில் 1ரு கப் தண்ணீர் விட்டு உப்பு போட்டு மாங்காய் விழுதையும் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்து வரும்போது, அரிசி மாவைத் தூவிக் கிளறி ஒரு கரண்டி வைத்து மூடி அடுப்பை சிறு தீயில் எரிய விடவும்.
பதினைந்து நிமிடம் கழித்து வெந்த மாவை இறக்கி நன்கு பிசையவும். உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி உருண்டைகளை ஒவ்வொன்றாக வைத்து வடைபோல் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இது ஒரு மொறுமொறுப்பான மாலைச் சிற்றுண்டியாகும்.
Post a Comment