கைமணம்! ஸ்டஃப்டு லெமன் ஊறுகாய்
ஸ்டஃப்டு லெமன் ஊறுகாய் தேவையானவை: எலுமிச்சம்பழம் & 10, பச்சை மிளகாய் & 8, வெந்தயம் & 2 டீஸ்பூன், கடுகு & 4 டீஸ்பூன், பெருங...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_1925.html
ஸ்டஃப்டு லெமன் ஊறுகாய்
தேவையானவை: எலுமிச்சம்பழம் & 10, பச்சை மிளகாய் & 8, வெந்தயம் & 2 டீஸ்பூன், கடுகு & 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் & 2 டீஸ்பூன், துருவிய இஞ்சி & 4 டீஸ்பூன், உப்புத்தூள் & 10 டீஸ்பூன், மஞ்சள்தூள் & 4 டீஸ்பூன்.
செய்முறை: வெந்தயம், கடுகு இவற்றை வாணலியில் தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மஞ்சள்தூள், உப்புத்தூள், துருவின இஞ்சி, பெருங்காயத்தூள், அரைத்த பச்சைமிளகாய், பொடித்த வெந்தயம், கடுகு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
எலுமிச்சம்பழங்களை நான்காக பிளந்து கொள்ளவும். விதைகளை எடுத்துவிடவும். ஊறுகாய் கலவையை, ஒவ்வொரு பழத்தின் உள்ளும் வைத்து ஸ்டஃப் செய்யவும். அப்படியே மூடி, ஈரமில்லாத ஜாடியில் வைத்து விடவும். அவ்வப்போது குலுக்கி விட்டால் போதும். எண்ணெய் சிறிதளவுகூட சேர்க்காமல் செய்வது இந்த ஊறுகாயின் தனிச்சிறப்பு.
ஸ்டஃப்டு லெமன் ஊறுகாய்: பச்சை மிளகாய் சேர்க்கப் பிடிக்காதவர்கள், காய்ந்த மிளகாய் சேர்த்துப் பொடித்துச் செய்யலாம். நன்கு ஊற, ஊற இந்த ஊறுகாயின் சுவை அதிகமாகும்.
Post a Comment