ரசிக்க.. ருசிக்க! மாலை நேர ஸ்பெஷல் பேபிகார்ன் பக்கோடா!
கைமணம்! மாலை நேர ஸ்பெஷல் பக்கோடா! பேபிகார்ன் பக்கோடா தேவையானவை: பேபிகார்ன் துண்டுகள் & ஒரு கப், கடலைமாவு & ஒரு கப், அரிசிமாவு &...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_1073.html
கைமணம்!
மாலை நேர ஸ்பெஷல் பக்கோடா!
பேபிகார்ன் பக்கோடா
தேவையானவை: பேபிகார்ன் துண்டுகள் & ஒரு கப், கடலைமாவு & ஒரு கப், அரிசிமாவு & ஒரு டேபிள்ஸ்பூன், சோளமாவு & அரை கப், பெரிய வெங்காயம் & 4, பச்சை மிளகாய் & 6, புதினா இலை & 20, சோம்பு & 2 டீஸ்பூன், டால்டா & ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி & பூண்டு விழுது, கறிவேப்பிலை & சிறிதளவு, எண்ணெய் & 2 கப்.
செய்முறை: புதினா, சோம்பு, மிளகாய் ஆகியவற்றை சற்று கரகரப்பாக அரைக்கவும். இஞ்சி&பூண்டு விழுதையும் அதோடு சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, சோளமாவு, அரிசிமாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு, டால்டா இவற்றை ஒன்றாகப் போட்டு, பேபிகார்னையும் போட்டு பிசறவும். தேவையானால் சிறிது நீர் தெளித்துப் பிசறலாம். வாணலியில் எண்ணெய் விட்டு, பிசறிய கலவையை பக்கோடாக்களாக உதிர்த்து விட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். நன்கு கரகரப்பாகவும், சுவையாகவும் உள்ள பேபிகார்ன் பக்கோடா புரதச்சத்து நிறைந்தது. பிள்ளைகளுக்குப் பிடித்த மாலை நேர ஸ்நாக்ஸ்.
பேபிகார்ன் பக்கோடா: வெங் காயத்தை நறுக்கிப் போடுவதை விட, மற்ற மசாலாக்கள் அரைக்கும் போது வெங்காயத்தையும் சேர்த்து அரைத்துவிட்டால், பிசறுவதற்கு தண்ணீரே சேர்க்கவேண்டாம்.
-----------------------------------------------------------------------------
Post a Comment