ஆரோக்கிய சமையல்! கம்பு அடை
கம்பு அடை தேவையானவை: கம்பு மாவு & ஒரு கப், மிளகுத்தூள் & ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் & அரை டீஸ்பூன், விருப்பப்பட்டால் பொடியாக நறு...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_696.html
கம்பு அடை
தேவையானவை: கம்பு மாவு & ஒரு கப், மிளகுத்தூள் & ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் & அரை டீஸ்பூன், விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய பூண்டு & ஒரு டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, அடையின் மேல் தடவ எண்ணெய் & சிறிதளவு.
செய்முறை: கம்பு மாவுடன், எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் கலந்து சிறிது வெது வெதுப்பான நீரை ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவை, வாழை இலையில் அடைக்குத் தகுந்தாற் போல் தட்டிக் கொள்ளவும். தோசைக் கல் காய்ந்ததும் அடைகளைப் போட்டு மிதமான தீயில் வேக விடவும். வெந்த அடைகளை அடுப்பின் மேல் நேரடியாக இரண்டு நிமிடம் சுட்டெடுக்கவும். சூடாக இருக்கும்போதே எண்ணெய் தடவி பரிமாறவும்.
Post a Comment