ரசிக்க.. ருசிக்க! மைசூர் ரசம்
மைசூர் ரசம் தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு - ½ ஆழாக்கு, தனியா - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1½ டீஸ்பூன், மிளகு - 10, சிவப்பு மிளகாய் - 5, ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_1753.html
மைசூர் ரசம்
தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு - ½ ஆழாக்கு, தனியா - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1½ டீஸ்பூன், மிளகு - 10, சிவப்பு மிளகாய் - 5, புளி - சிறிய எலுமிச்சை அளவு, பூண்டு - 3, கறிவேப்பிலை-சிறிதளவு, மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், பெருங்காயம் - சுவைக்கேற்ப உப்பு, வெல்லம் - தேவையான அளவு.
செய்முறை: துவரம் பருப்பைக் கழுவி போதிய அளவு தண்ணீர் சேர்க்கவும். பின்னர், கிள்ளிய சிவப்பு மிளகாய், மஞ்சள்தூள், சில பூண்டுப்பல், மிளகு, சீரகம், தனியா சேர்க்கவும். பிரஷர் குக்கரில் முதல் விசில் வரும் வரை வேக வைத்து ஆறவிடவும். பூண்டை உரித்து தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்கவும். வேகவைத்த பருப்பிலிருந்து அதிகப்படியான தண்ணீரை வடித்துவிட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த பருப்புத் தண்ணீர், வேக வைத்த பூண்டு, புளிக் கரைசல், உப்பு, வெல்லம் ஆகியவற்றை, அரைத்த பருப்புக் கலவையுடன் சேர்த்துப் போதிய தண்ணீர் விட்டு சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். எண்ணெயில் அல்லது நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து ரசத்தில் சேர்க்கவும். நறுக்கிய கறிவேப்பிலையை கடைசியில் சேர்க்கவும். சுடச்சுட மைசூர் ரசம் வாசனை கமகமக்கும்.
---------------------------------------------------------------------------------------
Post a Comment