சமையல் குறிப்புகள்! காலிஃபிளவர் 2006
காலிஃபிளவர் 2006 தேவையான பொருட்கள் : நடுத்தரமான காலிஃபிளவர் - 1 பூ, பெரிய வெங்காயம் - 1, இஞ்சி - 1 துண்டு, முழு பூண்டு - 1, மஞ்சள் தூள் -...
https://pettagum.blogspot.com/2011/03/2006.html
காலிஃபிளவர் 2006
தேவையான பொருட்கள் :
நடுத்தரமான காலிஃபிளவர் - 1 பூ, பெரிய வெங்காயம் - 1, இஞ்சி - 1 துண்டு, முழு பூண்டு - 1, மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், மைதா மாவு - 2 கைப்பிடி, அரிசி மாவு -1 கைப்பிடி, சோள மாவு - 2 கைப்பிடி, மிளகுத்தூள் - 1 ஸ்பூன், சர்க்கரை - 1 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 1 ஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - ருசிக்கேற்ப, நறுக்கிய வெங்காயத் தாள் - 1 கப்.
செய்முறை : காலிஃபிளவரை பூக்களாக வெட்டிக் கொள்ளவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்த தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவிட்டு எடுத்துக் கொள்ளவும். இஞ்சி வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை பல் பல்லாக உரித்து வைக்கவும்.
அரிசி மாவு, மைதா மாவு, சோள மாவு, சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு போட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி காலிஃபிளவரை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி வெங்காயம் போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு போட்டு நன்றாக
ஒரு கப் தண்ணீர் ஊற்றி, மிளகுத் தூள், சோயா சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு போட்டுக் கலக்கவும்.
ஒரு ஸ்பூன் சோள மாவை தண்ணீரில் கரைத்து இந்த கிரேவியில் ஊற்றவும். எல்லாம் நன்றாக கலந்து கிரேவி கெட்டியானதும் இறக்கி சூடாகப் பரிமாறவும்.
இது வித்தியாசமான ஸ்பெஷல் டிஷ்ஷாகும். பண்டிகைகளில் செய்து பரிமாற மிகவும் ஏற்றது.
---------------------------------------------------------------------------------------------
Post a Comment