அவல்-ஜாம் பிஸ்கட் தேவையானவை: பால் - ஒரு கப், வறுத்த அவல் - 2 கப், ஏதாவது ஒரு பழத்தின் ஜாம் - அரை கப், வெண்ணெய் - சிறிதளவு. செய்முறை: மிக்ஸி...
அவல்-ஜாம் பிஸ்கட்

தேவையானவை: பால் - ஒரு கப், வறுத்த அவல் - 2 கப், ஏதாவது ஒரு பழத்தின் ஜாம் - அரை கப், வெண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: மிக்ஸியில் அவலையும், அரை கப் பாலையும் சேர்த்து அரைக்கவும். மீதி பாலை அடுப்பில் வைத்து கெட்டியாகக் கொதிக்க விடவும். இதில் அரைத்த அவல் விழுதை சேர்த்து, கொதித்ததும் இறக்கி, நன்றாக ஆற விடவும். கேக் டிரேயில் வெண்ணெயைத் தடவி, பாதி கலவையைப் பரப்பி, இதன் மேல் ஜாமை தடவவும். மீதி அவல் கலவையை ஜாமின் மேல் பரப்பி, 'அவன்'-ஐ 180 டிகிரி 'சி'-யில் 3 நிமிடம் 'ப்ரீ ஹீட்' செய்து, அதே டெம்ப்பரேச்சரில் 20 நிமிடம் (அ) பொன்னிறமாகும் வரை 'பேக்' செய்யவும்.
ஆறிய பிறகும் மொறுமொறுப்பாகவே இருக்கும் இந்த பிஸ்கட்!
Post a Comment