முளைகட்டிய தானியங்களில் இருந்து சத்துணவு தயாரிப்பது எப்படி...சமையல் சந்தேகங்கள்
''கம்பு, கோதுமை, கேழ்வரகு, பாசிப் பயறு, சோயா, கொண்டைக் கடலை போன்றவற்றை முளைக்கட்டச் செய்து சத்துமாவுகளைத் தயாரிக்கலாம். இந்த தானியங்...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_1207.html
''கம்பு, கோதுமை, கேழ்வரகு, பாசிப் பயறு, சோயா, கொண்டைக் கடலை போன்றவற்றை முளைக்கட்டச் செய்து சத்துமாவுகளைத் தயாரிக்கலாம். இந்த தானியங்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். அதைத் தண்ணீரில் கொட்டி ஒரு இரவு முழுக்க ஊற வைக்கவும். மறுநாள் நீரில் அலசிவிட்டுத் துணியில் ஒரு இரவு, ஒரு பகல் மூட்டையாகக் கட்டி வைக்கவும். இந்த மூட்டையை தண்ணீரில் சிறிதளவு நனையும்படி வைக்கவும். தானியங்கள் முளைவிடத் தொடங்கியதும், வெயிலில் காயவைத்து, பின்பு மாவு அரைக்கும் இயந்திரம் மூலம் அரைக்கவேண்டும். இந்த மாவைப் பயன்படுத்தி புட்டு, முறுக்கு, இடியாப்பம், கொழுக்கட்டை... என விதம்விதமாக உணவுப் பண்டம் தயாரிக்கலாம்.
இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ்... போன்றச் சத்துகள் இந்த மாவில் ஏராளமாக இருக்கிறது. கர்ப்பிணி பெண்கள், வளரும் குழந்தைகள் போன்றவர் களுக்கு மிகவும் ஏற்ற உணவு இது. மற்றவர்களும் உண்ணலாம். அந்தக் காலத்தில் இதுபோன்ற உணவுகளை வீட்டிலேயே தயாரித்துக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். நாகரீக மாற்றத்தால் இந்தப் பழக்கம் காணாமல் போய்விட்டது.
Post a Comment