அழகுக் கலையில் செய்யக் கூடாதவை--அழகு குறிப்புகள்.

அழகுக் கலையில் செய்யக் கூடாதவை தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் ...

அழகுக் கலையில் செய்யக் கூடாதவை
தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும். வேலை காரணமாக தினமும் தலைக்குக் குளிக்க நேர்ந்தால், குழந்தைகளுக்கான ஷாம்பூ அல்லது மிதமான ஷாம்பூ பயன்படுத்தவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஜூஸ் எடுத்து, முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள் என்று சில அழகுக் குறிப்புகளில் சொல்லப்படுகிறது. ஆனால், எலுமிச்சம் பழத்தோல் அல்லது ஜூசை முகத்தில் அப்படியே தடவக் கூடாது; தோல் அலர்ஜியாகி விடும். பால் அல்லது பேஸ் பேக்குடன் கலந்து தான் உபயோகிக்க வேண்டும். பரு இருப்பவர்கள் முகத்தை மசாஜ் செய்யக் கூடாது; பரு காய்ந்து விட்டதா என்று கிள்ளிப் பார்க்கவும் கூடாது. எண்ணெய் பசை தோலுள்ளவர்கள், முகத்தை சுத்தப்படுத்த சோப்புக்கு பதில் தயிர் உபயோகிக்க கூடாது. மோர் அல்லது பால், எலுமிச்சை சாறு அல்லது பேஸ் வாஷ் கொண்டே முகத்தை சுத்தப்படுத்த வேண்டும்.
இவர்கள் முகத்துக்கு உபயோகிக்கும் பவுண்டேஷனை நீண்ட நேரம் பூசிக் கொண்டிருக்கக் கூடாது. பருக்கள் மற்றும் கரும்புள்ளி வந்து விடும். தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும். வேலை காரணமாக தினமும் தலைக்கு குளிக்க நேர்ந்தால், குழந்தைகளுக்கான ஷாம்பூ அல்லது மிதமான ஷாம்பூ பயன்படுத்தவும். முகத்தின் மீது நேரடியாக ஐஸ் கட்டி வைக்கவே கூடாது. அப்படி செய்தால், மிக மெல்லிய மேல்புறம் பாதிக்கப்படும். ஐஸ் கட்டியை பஞ்சு அல்லது துணிக்குள் வைத்து, முகத்தில் ஒற்றி எடுக்கலாம். அதேபோல், அதிக சூடான வெந்நீரிலும் முகம் கழுவக் கூடாது. புருவத்துக்கு மையிடும் ஐ-புரோ பென்சிலை வைத்து கண்ணுக்குள் மையிடக் கூடாது. வறண்ட தோல் கொண்டவர்கள், வெள்ளரி துருவல் அல்லது ஜூசை அப்படியே முகத்தில் பூசக் கூடாது; பேஸ் பேக் எதனுடனாவது கலந்துதான் பூச வேண்டும். இவர்கள், அப்படியே உபயோகிக்காமல் புதினா விழுது, முல்தானி மட்டியுடன் கலந்து உபயோகிக்கலாம். டூவீலரில் செல்லும் போது முடியை அப்படியே பறக்க விடக் கூடாது. அழுக்கு சேர்ந்து முடி கொட்ட ஆரம்பித்து விடும். காட்டன் துணியால் தலையை சுற்றி கட்டிக் கொள்ளலாம். தலைமுடி ஈரமாக இருக்கும் போது வாராதீர்கள்; முடி உடைந்து விடும். முகம் கழுவியபின், டவலால் முகத்தை இழுத்துத் துடைக்காதீர்கள்; ஒற்றி எடுப்பதே உத்தமம். இரவில் உபயோகிக்கும் நைட் கிரீமும், மாய்ச்சுரைசரும் கூட கண்ணைச் சுற்றி பூசக் கூடாது. இந்தப் பகுதியில் எண்ணெய் சுரப்பிகளுக்கான துளைகள் கிடையாது. அதனால், கண்ணைச் சுற்றிலும் உப்பிப் போகும் வாய்ப்பு இருக்கிறது. கொதிக்க, கொதிக்க வெந்நீரில் குளிக்கக் கூடாது. உடலில் அத்தனை வியர்வை துளைகளும் திறந்து கொண்டு விடும். நாள் முழுக்க வியர்வை கொட்டும் அழுக்குகள் சுலபமாக அந்த துவாரங்களில் தங்கி அடைத்துக் கொண்டு விடும். முகத்தில் கரும்புள்ளிகளும் வரும், வெந்நீரில் குளித்தால், கடைசியாக உடல் முழுக்க படும்படி இரண்டு குவளை பச்சைத் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அக்குளில் பவுடர் போடக் கூடாது. முக்கியமான வியர்வை சுரப்பிகள் அங்கே இருக்கின்றன. பவுடர் இந்த வியர்வைத் துளைகளை மூடி விடுவதால், வியர்வை வெளிவர முடியாமல், துர்நாற்றம் வீசும். எண்ணெய் பசை தோலுள்ளவர்கள் ஐஸ்கிரீம், எண்ணெய், நெய் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அழகுக்கு முக்கிய எதிரி மலச்சிக்கல்; இது, தோலின் பொலிவை பாதிக்கும். வாய் நாற்றம் ஏற்படும். தினசரி ஏதாவது ஒரு கீரை, பச்சை காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும்.

Related

அழகு குறிப்புகள். 5255338847750693558

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item