கழிவுத்தொட்டியில் (செப்டிக்டேங்க்), ‘ஆக்டிசெம்’ என்ற நுண்ணுயிர்க் கலவையைப் போட்டால் துர்நாற்றம் வீசாது--ஹெல்த் ஸ்பெஷல்

மனித மலம் சேகரமாகும் கழிவுத்தொட்டியில் (செப்டிக்டேங்க்), ‘ஆக்டிசெம்’ என்ற நுண்ணுயிர்க் கலவையைப் போட்டால் துர்நாற்றம் வீசாது. அதுமட்டுமல்ல......

மனித மலம் சேகரமாகும் கழிவுத்தொட்டியில் (செப்டிக்டேங்க்), ‘ஆக்டிசெம்’ என்ற நுண்ணுயிர்க் கலவையைப் போட்டால் துர்நாற்றம் வீசாது. அதுமட்டுமல்ல... அந்தத் தொட்டியிலிருக்கும் நீரை செடிகளுக்குக்கூடப் பயன்படுத்தலாம் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா... விளக்கம் தேவை?'' என்று தர்மபுரி மாவட்டம், பாளையத்தானூர், ராமு. வள்ளுவர் கேட்டுள்ளார். சுற்றுச்சூழல் ஆய்வாளர் பி. சதீஷ் இக்கேள்விக்குப் பதில் சொல்கிறார். "ஆக்டிசெம் என்பது ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள நிறுவனத்தின் தயாரிப்பு. கப்பல் மற்றும் விமானங்களில் உள்ள கழிவறைத் தொட்டிகளில் இதைப் பயன்படுத்துவார்கள். துர்நாற்றத்தைப் போக்கிவிடுவதோடு, திடமாக உள்ள கழிவுகளை தெளிந்தநீர் போல மாற்றிவிடும் தன்மையும் இதற்கு உண்டு. இது வெளிநாட்டுத் தயாரிப்பு என்பதால் அதிக விலைக்கு விற்பனையாகிறது. ஆகையால், செலவு குறைந்த நுண்ணுயிர்க் கலவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பெயர் ‘பேக்டிசெம்’. 'ஆக்டிசெம்' என்ற கலவையைக் காட்டிலும் வேகமாகச் செயல்பட்டு, கழிவு களில் உள்ள தீமை செய்யும் நுண்ணுயிரிகளைச் சிதைக்கும் குணமுடையது இந்த 'பேக்டி செம்'. ஐந்து நபர்கள் வசிக்கும் வீட்டில் உள்ள கழிவுத் தொட்டிக்கு 100 கிராம் அளவு கொண்ட பேக்டிசெம் போதும். இதன் விலை 120 ரூபாய். ஒரு முறை பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் வரை கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பேக்டிசெம் என்ற கலவையில் இருக்கும் நுண்ணுயிர்களின் உணவே... தீமை செய்யக் கூடிய பாக்டீரியாக்கள்தான். எனவே, தீமை செய்யும் நுண்ணுயிர்களை இந்த பேக்டிசெம் சிதைத்துவிடும். இதனால் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசாது. இதன் அடிப்படைத் தத்துவம்... கிராமங்களில் வாந்தி எடுத்த இடத்திலும், கழிவுகள் உள்ள இடத்திலும் மண்ணை அள்ளிப் போடுவார்கள். இப்படிச் செய்வதால் அந்த மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் உடனடியாக வேலை செய்யத் தொடங்கிவிடும். அதனால்தான் மண்ணை அள்ளிப் போட்டவுடன் அந்த இடத்தில் துர்நாற்றம் வீசாது. இதே தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த பேக்டிசெம் கலவையும் வேலை செய்கிறது. துர்நாற்றம் வீசாது என்பதோடு, அந்தத் தொட்டியிலிருக்கும் கழிவை, தெளிந்த நீராக மாற்றிவிடும். அது கழிவுத் தொட்டியின் நீர் என்று யாராலும் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது. அந்தளவுக்கு அதன் தன்மையை மாறிவிடும். அந்த நீரை செடிகளுக்கும், மரங்களுக்கும் பயன்படுத்தலாம். இந்தச் செய்தியை சொல்லும் போதே சிலருக்கு அருவெறுப்பு ஏற்படும். ஆனால், உண்மை அதுதான். எனவே மன ரீதியாக நாம் பக்குவப்பட்டால், அந்தத் தண்ணீரையும் பயனுள்ள வகையில் பாசனத்துக்குப் பயன்படுத்தலாம். கழிவுத் தொட்டிக்கு பேக்டிசெம் பயன்படுத்துபவர்கள், கழிவறையை ரசாயனப் பொருட்கள் கொண்டு சுத்தப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் தொட்டியில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் மடிந்துவிடும். ஆகவே, வினிகர், எலுமிச்சைப் பழம் போன்றவற்றைப் பயன்படுத்தி கழிவறையைத் தூய்மை செய்யலாம்.'' தொடர்புக்கு: அலைபேசி-98401-81908

Related

ஹெல்த் ஸ்பெஷல் 8332907822122335833

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item