கேப்பைக் (கேழ்வரகு) கூழ்--சமையல் குறிப்புகள்
கேப்பைக் கூழ் ஒரு மிகவும் ருசியான, அருமையான உணவாகும். சூடாகவும் சாப்பிடலாம், குளிரவைத்தும் சாப்பிடலாம், புளிக்கவைத்தும் சாப்பிடலாம். புளிக்க...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_4588.html
கேப்பைக் கூழ் ஒரு மிகவும் ருசியான, அருமையான உணவாகும். சூடாகவும் சாப்பிடலாம், குளிரவைத்தும் சாப்பிடலாம், புளிக்கவைத்தும் சாப்பிடலாம். புளிக்கவைத்தால் சுவை மிகும். தொட்டுக்கொள்ள ஊறுகாய், மாங்காய், வறுத்த மோர் மிளகாய் இப்படி எதுவானாலும் இதற்கு எற்றதேயாகும்.
தேவையான பொருட்கள்:
- கேப்பை மாவு / ராகி மாவு / கேழ்வரகு மாவு: ஒரு கப்
- அரிசிக் குருணை / நொய்: கால் கப்
- தயிர்: தேவையான அளவு
- உப்பு: தேவையான அளவு
- கேப்பை மாவுடன் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும்.
- ஒரு நாள் முழுவதும் புளிக்கட்டும்.
- ஒரு பாத்திரத்தில் நீர் விட்டுக் கொதிக்க விடவும். பிறகு குருணை சேர்த்து வேக விடவும்.
- வெந்ததும், புளித்த மாவை ஊற்றிக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- தீ சற்று குறைவாக இருக்கட்டும்.
- கையில் ஒட்டாத பதத்தில் இறக்கி விட வேண்டும்.
- இதை அப்படியே கரைத்துக் குடிக்கலாம்.
- மறு நாள், இதில் தயிர், உப்பு, சேர்த்துக் கரைத்தும் குடிக்கலாம் .
Post a Comment