சீரக சிக்கன் -- சமையல் குறிப்புகள்
சீரக சிக்கன் தேவையான பொருட்கள் : சிக்கன - 1/2 கிலோ எண்ணெய் - 2 - 3 மேஜை கரண்டி முதலில் தாளிக்க: · பட்டை - 1 · ...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_6316.html
சீரக சிக்கன்
தேவையான பொருட்கள் :
சிக்கன - 1/2 கிலோ
எண்ணெய் - 2 - 3 மேஜை கரண்டி
முதலில் தாளிக்க:
· பட்டை - 1
· ஏலக்காய் - 2
· கிராம்பு - 2
கொரகொரப்பாக அரைத்து கொள்ள :
· வெங்காயம் - 2 - 3
· பூண்டு - 10 பல்
· இஞ்சி - 1 பெரிய துண்டு
வறுத்து அரைத்து கொள்ள :
· கசகசா - 2 மேஜை கரண்டி
· காய்ந்த தேங்காய் துறுவல் - 1 மேஜை கரண்டி
ஒன்றும் பாதியுமாக பொடித்து கொள்ள :
· மிளகு - 10 - 15 (காரத்திற்கு எற்றாற் போல)
பொடித்து கொள்ள :
· சீரகம் - 2 மேஜை கரண்டி
சேர்க்க வேண்டி தூள் வகைகள் :
· மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
· மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
· உப்பு - தேவைக்கு
செய்முறை :
· சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தினை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி + பூண்டு + நறுக்கிய வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
· கசகசாவினை சிறிது வறுத்து அத்துடன் தேங்காயும் சேர்த்து வறுத்து கொண்டு சிறிது தண்ணீரில் ஊறவைத்து மைய அரைத்து கொள்ளவும்.
· சீரகத்தினை பொடித்து கொள்ளவும். மிளகினை ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும்.
· அரைத்த கசகசா + சிக்கன் + பொடித்த மிளகு + 1 தே.கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
· கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பிறகு, அரைத்த வெங்காய விழுதினை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
· அத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து மேலும் 5 - 6 நிமிடங்கள் வதக்கவும்.
· பிறகு, ஊறவைத்துள்ள சிக்கனை இத்துடன் சேர்த்து கிளறவும்.
· சிக்கன் பாதி வெந்தவுடன், சீரகத்தினை சேர்த்து கிளறி மேலும் வேகவிடவும்.
· சுவையான சீரக சிக்கன் ரெடி. இதனை சாதம், குழம்பு, சாப்பத்தி, தோசை போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
கவனிக்க :
சீரகம், மிளகு போன்றவையினை Freshஆக பொடித்து கொண்டு சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
வெங்காயத்தினை கொரகொரப்பாக தான் அரைக்க வேண்டும். மைய அரைத்தால் சுவை வேறுப்படும்.
கசகசாவிற்கு பதிலாக 4 முந்திரி பருப்பினை விரும்பினால் சேர்த்து கொள்ளலாம். அதிகம் சேர்க்க வேண்டாம்.
சிறிது கிரேவியாக விரும்பினால் வெங்காயத்தினை கூடுதலாக சேர்த்து கொள்ளவும். அல்லது சிக்கன் ஸ்டாக் சேர்த்து கொள்ளலாம்.
Post a Comment