இனிய இதயமே நீ நலமா...ஹெல்த் ஸ்பெஷல்

மனித வாழ்க்கையில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் சொல் எது தெரியுமா? - இதயம். காதலன், காதலியிடம் "உன் இதயத்தை தொட்டுச் சொல்.. உண்மையிலே...

மனித வாழ்க்கையில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் சொல் எது தெரியுமா? - இதயம். காதலன், காதலியிடம் "உன் இதயத்தை தொட்டுச் சொல்.. உண்மையிலே என்னை காதலிக்கிறாயா?''-என்பான். அவள், அவனுக்கு சில நேரங்களில் பாராமுகம் காட்டினால், "உனக்கு இதயமே இல்லையா.. உன் இதயத்தில் கருணையே இல்லையா?''- என்று கேட்பான். சோகமான ஒரு விஷயத்தை நாம் கேட்கும்போது, "என் இதயமே நொறுங்கிவிட்டது''- என்போம். மகிழ்ச்சியான விஷயத்தை கேட்கும்போதும், ஒருவரை அன்போடு வாழ்த்தும் போதும் "இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்''- என்று கூறுவோம். இதயம் என்ற சொல்லுக்கு நமது அன்றாட வாழ்க்கையில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதால், நமது உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு என்பது நமக்கு தெரியத் தான் செய்கிறது. மனிதன் தாய் வயிற்றில் கருக்கொள்ளும் சில வாரங் களிலே இதய துடிப்பு மூலம், `இதோ நான் உருவாகிவிட்டேன்' என்று உயிரின் தொடக்கத்தை உருவாக்கி, மரணம் வரை நமக்காக துடித்துக்கொண்டே இருக்கும் அந்த இனிய இதயத்தை நாம் நல்ல முறையில் பராமரிக்கிறோமா? பெரும்பாலானவர்கள் இல்லை என்றுதான் சொல்வார்கள். அதனால்தான், `நேற்று ராத்திரிதான் என்னோடு சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இன்றைக்கு காலையிலே அவர் செத்து போயிட்டார்ன்னு தகவல் வந்தது. என்னால நம்பவே முடியலேப்பா.. ஹார்ட் அட்டாக்ல இறந்திட்டாராம்..' என்ற உரையாடலை தெருவுக்கு தெரு அடிக்கடி கேட்க முடிகிறது. ஹார்ட் அட்டாக் இருதலைக்கொள்ளி போன்றது. எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாமல், வந்த சுவடே தெரியாமல் சத்தமின்றி சாகடித்து விடவும் செய்யும். `நெஞ்சு வலிக்கிறது.. இதோ அளவில்லாமல் வியர்க்கிறது.. என்னென்னு சொல்லத் தெரியலை ஆனா என்னென்னவோ பண்ணுது..' என்று சொல்லும் அளவுக்கு அறிகுறிகளை தந்து உஷார் படுத்தி, சாகடித்து விடவும் முயற்சிக்கும். அதனால், `அப்படியும் நடக்கலாம். இப்படியும் நடக்கலாம்.. எப்படியும் நடக்கலாம்' என்று பயப்படுத்துகிறது, ஹார்ட் அட்டாக்! குடும்பத்தின் தலைவன் இந்த நோய்க்கு பலியாகிவிட்டால் அந்த குடும்பமே நிலைகுலைந்து போகிறது. பணக்கஷ்டத்தில், துக்கத்தில், சோகத்தில் தடுமாறி அப்படியே கவிழ்ந்துபோன குடும்பங்களும் உண்டு. ஆனால் பயப்பட வேண்டியதில்லை. இதயத்தை பரிசோதித்து (மருத்துவமுறையில்) நலம் விசாரித்து, ஹார்ட் அட்டாக் வரும் முன்பே அதை கண்டறிந்து, பராமரித்தாலே போதும், இதயம் நன்றாக இயங்கும். சரி, அறிகுறி தெரிந்த உடனே அடுத்து என்ன செய்யவேண்டும்? மேற்கண்ட அறிகுறிகளில் எது இருந்தாலும், அலட்சியம் செய்யக்கூடாது. உடனே டாக்டரை அணுகவேண்டும். முதலில் ஈ.சி.ஜி. எடுத்து பார்ப்பார்கள். அதில் சீரற்ற நிலை இருந்தால், அடுத்தகட்ட பரிசோதனைகளை தொடர வேண்டும். சிலருக்கு நுரையீரல் தொடர்புடைய வலி இருந்தாலும், இதயப் பகுதியில் வலிக்கும். சிலருக்கு ஈ.சி.ஜி.யில் மாற்றம் இருக்கும். ஆனால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்காது. அதனால் அவசரப்பட்டு மருந்து சாப்பிட்டுவிடக் கூடாது. ஈ.சி.ஜி. தொடக்க பரிசோதனை முறைகளில் ஒன்று. ஆனால் அது மட்டுமே 100 சதவீத திருப்தியான பரிசோதனை முறையில்லை. அடுத்தகட்டமாக பசுச்சி-ப என்ற பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். இது ஒரு சிறிய பேண்ட்டேஜ் துண்டுபோன்றிருக்கும். அதில் ஒரு சொட்டுக்கும் குறைவான அளவில் ரத்தத்தை எடுத்து வைத்து பரிசோதிக்க வேண்டும். ஒரு கோடு விழுந்தால் அவருக்கு இதய பாதிப்பு இல்லை என்றும், இரு கோடுகள் விழுந்தால் பாதிப்பு ஏற்பட்டிருப் பதாகவும் உணரலாம். ஒருவரின் இதயத்தில் பாதிப்பு இருப்பதாக கண்டறிந்துவிட்ட பின்பு, அந்த பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை உடனே கண்டறிந்தால்தான் அதற்கு தக்கபடி முழுமையான சிகிச்சையை திட்டமிட்டு அளிக்க இயலும். பாதிப்பின் அளவை கண்டறிவதற்கு ஆஞ்சியோ முறை உதவும். தொடையில் இருக்கும் முக்கிய ரத்தக் குழாய் வழியாக குழாயை விட்டு, இதயப்பகுதிக்கு ரத்தம் கொடுக்கும் குழாய் அருகில் கொண்டு சென்று `ஹூக்' செய்து, அழுத்தம் கொடுத்து அடைப்பு இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இது ஒருசில பாதிப்புகள் கொண்ட பழைய பரிசோதனை முறையாகும். அதற்கு மாற்றாக இருக்கும் நவீன பரிசோதனை முறை `64 சிலைஸ் சி.டி. கொரோனரி ஆஞ்சியோகிராம்' எனப்படுகிறது. ஐந்து வினாடிக்கும் குறைவான நேரத்தில் இந்த பிரமாண்ட ஆஞ்சியோ ஸ்கேன் கருவி, ஒருவரின் இதயப் பகுதியை 64 விதமாக துல்லியமாக படம் எடுத்துவிடுகிறது. நவீன கம்ப்ïட்டர்களில் அதைப் பார்த்து எந்த பகுதியில், எந்த அளவில் அடைப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்துவிடலாம். சாப்பிட்டு 2 முதல் 3 மணிநேர இடைவெளிக்கு பிறகு இந்த பரிசோதனைக்கு வரவேண்டும். முதலில் ஈ.சி.ஜி. எடுத்துப் பார்ப்பார்கள். அவரது இதயத் துடிப்பு 80-க்கு கீழ் இருக்கவேண்டும். இதயம் கண் இமைக்கும் நேரத்தில் விரிந்து, சுருங்கும் தன்மை கொண்டது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில், இதயத்தை இந்த கருவி படமெடுக்கும். அதனால் இதயம் அதிக வேகத்தில் துடித்துக்கொண்டிருந்தால், எடுக்கப்படும் படங்கள் அவ்வளவு துல்லியமாக இருக்காது. ஆகவே இதயம் வேகமாக துடித்தால், இந்த பரிசோதனையின்போது அருகில் இருக்கும் இதயநோய் நிபுணர் துடிப்பை கட்டுப்படுத்த மருந்து கொடுப்பார். இதய துடிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பின்பு, கருவியில் படுக்கவைக்கப்படுவார். அப்போது கையில் `காண்ட்ராஸ்ட் இன்செக்ஷன்' அதற்குரிய கருவி மூலம் செலுத்தப்படும். அந்த மருந்து இதயப் பகுதிக்கு செல்லும்போது 5 வினாடிகள் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் ஸ்கேன் கருவி, சர்ரென்று வேலை செய்து, படம் பிடித்து, கம்ப்ïட்டர் திரைகளில் துல்லியமாக எங்கெங்கு அடைப்பு இருக்கிறது என்பதைக் காட்டும். நமது இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் முக்கிய பணியை மூன்று ரத்தக் குழாய்கள் மேற்கொள்கின்றன. அதில் ஒன்றிலோ, இரண்டிலோ அடைப்பு ஏற்பட்டிருந்தால் அவைகளில் ஷிåமீஸீå வைப்பார்கள். மூன்றும் அடைத்திருந்தால் உடனடியாக `பைபாஸ்' ஆபரேஷன் செய்வார்கள். அதன் மூலம் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு தவிர்க்கப்படும். மாரடைப்புக்கு காரணமான இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை கண்டுடிக்க மட்டுமே இந்த ஆஞ்சியோகிராம் சி.டி.ஸ்கேன் கருவி பயன்படும் என்பதில்லை. ஏற்கனவே ஸ்டென்ட் இணைத்தவர்களுக்கு அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கும், பைபாஸ் ஆபரேஷன் செய்தவர்களுக்கு அந்த பகுதியின் செயல்பாடு திருப்தியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கும் இந்த ஸ்கேன் பரிசோதனை உதவும். இன்று மனிதர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், மனஅழுத்தம் போன்றவைகளால் 30 வயதுவாக்கிலே இளைஞர் களுக்கு இதயநோய் ஏற்படுகிறது. வந்த பின்பு அதை தடுப்பதற்கும், தவிர்ப்பதற்கும் போராடுவதைவிட வரும்முன்பே இந்த நவீன சி.டி.ஸ்கேன் மூலம் இதயத்தை பரிசோதித்துக் கொள்வது நல்லது. நாம் தாய் வயிற்றில் கருவாகி, உருவாகும்போதே துடிக்க ஆரம்பித்து, நாம் பிறந்து, வளர்ந்து உயிர்வாழும் கடைசி வினாடி வரை இடைவிடாது துடித்து நம்மை இயக்கும் இதயத்தை துவண்டு விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. இதயத்தின் ஆரோக்கியமே இல்லத்தின் ஆரோக்கியம். கட்டுரை: டாக்டர் ஆர். இம்மானுவேல் M.D.(R.D) சென்னை - 14. *** சரி! எந்த அறிகுறியும் இன்றி எந்த சூழலில், யாரை, ஹார்ட் அட்டாக் தாக்கும்? - ரத்த அழுத்தம் 130/80 என்ற சராசரி நிலைக்கு மேல் இருந்தால் - சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருந்தால் - கொழுப்பு 200 (mg/dl) என்ற சராசரி கணக்கைவிட அதிகம் இருந்தால் - குடும்பத்தில் உள்ளோருக்கு பாரம்பரியமாக இதய நோய் இருந்தால் - புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால்.. (இதயநோய் வராவிட்டாலும் புற்றுநோய் வந்து விடும்) - முழுநேரமும் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் - வாரத்திற்கு 3 தடவைகூட உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் - உடல் எடை மிக அதிகமாக இருந்தால் - மன அழுத்தம் நிறைந்த வேலையில் வருடக் கணக்கில் தொடர்ந்தால் - தாங்க முடியாத துக்கம், இழப்பை சந்தித்து அதிலிருந்து மீள முடியாமல் தவித்தால் ... இப்படிப்பட்ட காரணங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு அறிகுறியே இல்லாமல் மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலை அதிகம். ஆண்கள் 40 வயதை தாண்டும்போதும், பெண்கள் 45 வயதை தாண்டும்போதும் இதில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். அறிகுறிகளை வெளிப்படுத்தியும் மாரடைப்பு வரலாம். மாரடைப்புக்கு பொதுவாக ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன? - அதிகபட்ச சோர்வு - மாடிப்படிகள் ஏறும்போது சிரமப்படும் அளவுக்கு மூச்சு வாங்குதல் - திடீரென்று மிக அதிகமாக வியர்த்து வழிதல் - நெஞ்சு படபடப்புடன், பாரமாகுதல் - இடதுபக்கமாக தோள்பட்டை, கைகளில் வலி பரவுதல் - இதயப் பகுதி இனம்புரியாத அவஸ்தைக்கு உள்ளாகுதல் ... போன்று பல அறிகுறிகள் உள்ளன.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 2645793239379502934

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item