பழமொழிகளில் மருத்துவம். -- பெட்டகம் சிந்தனை
பழமொழிகளில் மருத்துவம். மருந்துக்கு அடிமையாவதைவிட மனைவிக்கு அடிமையாகலாம்! மருந...
மருந்தும் விருந்தும் மூன்று நாட்கள்!
மனப்பொருத்தம் நல்ல திருமணத்திற்கு, மருந்துப் பொருத்தம் நோய் குணமாவதற்கு.
மருந்துக்குத் தெரியுமா மருத்துவரின் குணம்?
மலர்களும் மனிதர்க்கு நல்ல மருந்தாகும்!
மிகுந்த மனக்கவலை இருந்தால் மருந்துக்குப் பலன் இல்லை!
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்!
மழைக்காலத்தில் மோரும் கோடை காலத்தில் நீரும் மருந்தாகும்!
நோய் இல்லையேல் மருந்துகளும் இல்லை!
காலந்தாழ்த்தி மருந்து உண்டால், காலம்காலமாய் அவதி உண்டு.
மருந்துகளுக்கு அடங்காத நோய் வந்தால், ஊர்
முழுதும் நோய்க்குக் கொண்டாட்டம்!
உடல்நிலை, உள்ள நிலை அறிந்து மருந்துஉண்!
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே மருந்துகளும் தோன்றின!
சுத்தமான காற்றும் சுத்தமான நீரும் சுகத்தில் நல்மருந்துகளாம்!
கடுஞ்சளிக்கு சாப்பாடு மருந்து
காய்ச்சலுக்கு பட்டினி மருந்து!
2 comments
//மருந்துக்கு அடிமையாவதைவிட மனைவிக்கு அடிமையாகலாம்!
//
அது எப்பவோ ஆகிடோம்ல
Thanks for your kinds by A.S. Mohamed Ali
Post a Comment