வீட்டுக்குறிப்புக்கள்,
ரவை, பாசிப்பயறு, சேமியா, போன்றவற்றை புழு பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற, அவற்றை லேசாக வறுத்து, காற்றுப்போகாத கொள்கலன்களில் சேமிக்கவும். தய...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_8237.html
ரவை, பாசிப்பயறு, சேமியா, போன்றவற்றை புழு பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற, அவற்றை லேசாக வறுத்து, காற்றுப்போகாத கொள்கலன்களில் சேமிக்கவும்.
தயிர் கெட்டியாக உறைய வேண்டுமானால் மண் கலயத்தில் உறை ஊற்றவும்.
குளிர் சாதனப்பெட்டியில் கெட்ட வாடை வீசாது இருக்க, உள்ளே ஒரு மூலையில் ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவை ஒரு சிறிய கிண்ணத்தில் வைக்கவும்.
காலிபிளவரில் இருந்து தூசியை நீக்கவும், பூச்சிகளை அழிக்கவும், அதை சிறிது வினிகர் கலந்த தண்ணீரில் மூழ்க வைத்து, சிறிது நேரம் சென்றதும் நீரில் அலசி, பின்னர் சமையல் செய்யவும்.
உப்பு சரசர என்று தூவப் பட வேண்டும் என்றால் சிறிது அரிசியை உப்புடன் சேர்த்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைக்கும் பொழுது சிறிது உப்பைச் சேர்த்தால், எளிதாக உரிக்கலாம்.
குளிர் பானங்களில் கலக்கும் முன் சீனியை மிக்சியில் பொடியாக்கிக் கொண்டால் விரைவில் கலந்து விடலாம்.
Post a Comment