புரோட்டீன் சப்பாத்தி பலே பலே ! சமையல் குறிப்புகள்
புரோட்டீன் சப்பாத்தி பலே பலே ! புரோட்டீன் சப்பாத்தி தேவையானவை: கோதுமை மாவு - 150 கிராம், ஓட்ஸ் - 100 கிராம், பொட்டுக்கடலை - 50 கிராம், சர்...


தேவையானவை: கோதுமை மாவு - 150 கிராம், ஓட்ஸ் - 100 கிராம், பொட்டுக்கடலை - 50 கிராம், சர்க்கரை - ஒரு சிட்டிகை, உப்பு - 2 சிட்டிகை, நெய் (அ) எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையுடன் சர்க்கரை சேர்த்துப் பொடிக்கவும். அகலமான ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஓட்ஸ் மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும். இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் இடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, சூடான தோசைக்கல்லில் போட்டு, நெய் அல்லது எண்ணெய் தடவி திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.
வெங்காயம், புதினா, கொத்தமல்லி... இதில் ஏதேனும் ஒரு துவையல் அல்லது கெச்சப் தொட்டு சாப்பிட... சூப்பராக இருக்கும்! இந்த சப்பாத்தி புரதச்சத்து நிறைந்தது
Post a Comment