உருளைக்கிழங்கு பராத்தா--சமையல் குறிப்புகள்
உருளைக்கிழங்கு பராத்தா சுவையான உருளைக்கிழங்கு(ஆலு) பராத்தா செய்வதற்கான எளிய குறிப்பு. தேவையான பொருட்கள் மசாலாவிற்கு உருளைக்கிழங்கு...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_1690.html

சுவையான உருளைக்கிழங்கு(ஆலு) பராத்தா செய்வதற்கான எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள் மசாலாவிற்கு
- உருளைக்கிழங்கு – 4 -5
- எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
- சீரகம் – 1 /2 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 2 -3
- மல்லித்தழை பொடியாக நறுக்கியது – கையளவு
- கரம் மசாலா – 1 /2 தேக்கரண்டி
- அம்சூர் அல்லது உலர் மாங்காய்த்தூள் – 1 /2 தேக்கரண்டி
- உப்பு – தேவைக்கேற்ப
பராத்தாவிற்கு
- கோதுமை – 2 கப்
- சப்பாத்தி தேய்ப்பதற்கு கோதுமை மாவு – 1 /4 கப்
- நெய்/ எண்ணெய் / வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
- உப்பு – தேவைக்கேற்ப
- தயிர் – 2 மேசைக்கரண்டி
- தண்ணீர் – தேவையான அளவு
- பராத்தா போடுவதற்கு – 2 – 3 தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய்
செய்முறை
- கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம்,பச்சை மிளகாய்சேர்த்து வெடிக்க விட்டு தனியே வைக்கவும்.
- உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து கட்டி இல்லாமல் மசித்துக் கொள்ளவும்.
- மசாலாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும், சீரகத்தையும் ஒன்றாகச் சேர்த்து பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
- கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய் அல்லது நெய், தயிர் மற்றும் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து ஓரளவிற்கு மிருதுவாகப் பிசையவும்.
- உருண்டையை ஈரத் துணியால் 20 -30 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து எடுத்து மீண்டும் பிசையவும்.
- மசாலா மற்றும் கோதுமை மாவு உருண்டை ஆகியவற்றை சிறு சிறு சம அளவு உருண்டைகளாக தனித்தனியாக உருட்டிக் கொள்ளவும்.
- மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து சப்பாத்தி போல வட்டமாகத் தேய்க்கவும். பின் மசாலாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து சப்பாத்தி நடுவில் வைத்து எல்லா பக்கத்திலிருந்தும் சேர்த்து மசலாவை மூடவும்.
- இப்போது உருண்டையை உள்ளங்கையின் நடுவில் வைத்து அழுத்தி மசலாவை சமமாகப் பரப்பவும்.
- உலர்ந்த மாவு தூவி சீரான வட்டமாகத் தேய்க்கவும்.
- சூடான தவாவில் போட்டு எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.
- உருளைக்கிழங்கு(ஆலு) பராத்தா தயிர் அல்லது பருப்புடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
Post a Comment