ஷாம்பூவில் தண்ணீர் கலந்து பயன்படுத்துவது நல்லது -- அழகு குறிப்புகள்.

வெளியில் போகிறவர்களுக்கு கோடை காலத்தில், கூந்தல், வைக்கோலைப் போல் உலர்ந்து விடும். எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி இருந்தால்...

வெளியில் போகிறவர்களுக்கு கோடை காலத்தில், கூந்தல், வைக்கோலைப் போல் உலர்ந்து விடும். எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி இருந்தால், வாரத்திற்கு ஒரு தடவை காய்ச்சிய எண்ணெயை, தலையில் நன்றாகத் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின், தலைக்கு குளிக்கவும்.

ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டி வேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி ஆகியவை தலா, 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைத்தால், சூரிய கதிர்கள் பட்டு, எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடி கட்டவும். குளிக்கும் முன் இதை தலையில் தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும். செம்பட்டை முடி கருமையாகும்; பொடுகு நீங்கும்.

தினமும் தலைக்குக் கொஞ்சம் எண்ணெய் தடவி வர வேண்டும். அது, தேங்காய் எண்ணெயாக இருந்தால் நல்லது. எண்ணெய் தடவும் போது, விரல்களின் நுனியால் தலையில் அழுத்திப் பிடித்து விட்டுத் தேய்க்க வேண்டும். அப்படிச் செய்தால், கூந்தல், எண்ணெய் பசையுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

வெந்தயத்தை விழுதாக அரைத்து, தலையில் தடவி ஊறவிட்டு, பின்னர் எலுமிச்சை சாறு கலந்த நீரில் குளிக்கவும். இது, குளிர்ச்சியை ஏற்படுத்தும். செம்பருத்தி பூக்களை பசை போல அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை தலையில் தடவி பின்னர் அலசவும். சாதம் வடித்த நீருடன் சீகைக்காய் கலந்து. அதைக் கொண்டு முடியை தேய்த்து விட்டால், முடி பளபளக்கும். பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ, 50 கிராம் வாங்கி, அதை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாக தேய்த்து, அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ மூன்று வாரங்கள் குளித்தால், பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

வெந்தயம், வால் மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வர, இளநரை மறையும். கூந்தலுக்கு எப்போதும் எண்ணெய் பசையும், நீர்ச் சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி, நரை முடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும் போது, முறையான பயிற்சி வேண்டும். ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தும் போது, ஒரு கோப்பை தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து, பின்பு பயன்படுத்த வேண்டும்.

Related

அழகு குறிப்புகள். 4232296223096696847

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item