சுறா பூண்டு குழம்பு--சமையல் குறிப்புகள்
சுறா பூண்டு குழம்பு தேவையான பொருட்கள் சுறா - 1/2 கிலோ (எலும்பு, தோல் நீக்கியது) பூண்டு - 3 (முழு அளவு) மிளகுத்தூள் - 3 டீஸ்பூன் சீரகம் - 1...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_3729.html
சுறா பூண்டு குழம்பு
தேவையான பொருட்கள்
சுறா - 1/2 கிலோ (எலும்பு, தோல் நீக்கியது)
பூண்டு - 3 (முழு அளவு)
மிளகுத்தூள் - 3 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
புளி - எலுமிச்சம் பழ அளவு (கரைக்கவும்)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம், தக்காளி - 200 கிராம் (நறுக்கியது)
பச்சைமிளகாய் - 3 கீறியது
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். உரித்த பூண்டு, தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் இவற்றைச் சேர்த்து சிறிது நீர் விடவும். போதுமான உப்பு சேர்க்கவும்.
* சுறாவைச் சேர்த்து வேக விடவும்.
* சுறா வெந்தவுடன் புளிக்கரைசலைச் சேர்க்கவும். அத்துடன் சீரகம், மிளகுத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து குழம்பு நன்கு திக்கானதும், கொத்தமல்லி இலை தூவி இறக்கிப் பரிமாறவும்.
********************************************************************
Post a Comment