கல்லீரல் பலப்பட-பூவரசு--மருத்துவ டிப்ஸ்,
உடலின் செயல்பாட்டிற்கு ஊக்க சக்தியை அளிப்பது கல்லீரல்தான். இந்த கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் பலவகையான இன்னல்களை சந்திக்க நேரிடும். இதனால...


பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது. பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.
பூவரசன் பழுத்த இலை - 2
பூவரசன் பழுத்த காய் - 4
சீரகம் - 2 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூவரசம் பட்டை - 1 துண்டு
கீழாநெல்லி - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 4
சிறுநெருஞ்சில் - 5 கிராம்
இவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து, 3 கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1/2 கப்பாக வந்தவுடன் அருந்தி வந்தால் கல்லீரல் பலப்படும். கை, கால் நடுக்கம் குறையும். மஞ்சள் காமாலை நோயை அறவே நெருங்க விடாமல் உடலை பாதுகாக்கும்.
மேக நோய்க்கு:
அகத்தியர் தன்னுடைய அகத்தியர் மேகநோய் சிகிச்சை படலத்தில் உடல் கிருமிகளை அழிக்க வல்ல சக்தி கொண்டது பூவரசு என்கிறார். இதன் காயை இடித்து சாறு எடுத்தால் பசபசப்புடன் பால் இருக்கும். இது மேக நோய்களை போக்க சிறந்த மருந்தாகும். இது சித்தர்கள் கண்ட அனுபவ மருந்தாகும். பூவரசம் காயிலிருந்து உண்டாகும் ஒருவித மஞ்சள் நிறமுள்ள பாலை தோலின் மீது தடவினால் எச்சில்தழும்புகள் மாறும். மூட்டு வீக்கங்களுக்கு பூச வீக்கம் கரையும். பூவரசம் பட்டை, எண்ணெயினால் வெள்ளை நோயும், சரும நோயும் நீங்கும்.
Post a Comment