ஆரோக்கிய சமையல்! வெஜிடபிள் பனீர் தோசை-
வெஜிடபிள் பனீர் தோசை- தேவையானவை: தோசை மாவு & ஒரு கப், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, (விருப்பப்பட்டால்) பீட்ரூட் துருவல்,...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_9772.html
வெஜிடபிள் பனீர் தோசை-
தேவையானவை: தோசை மாவு & ஒரு கப், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, (விருப்பப்பட்டால்) பீட்ரூட் துருவல், துருவிய பனீர் & சிறிதளவு, மிளகுத் தூள் & கால் டீஸ்பூன், நெய், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: துருவி வைத்துள்ள பொருட்களுடன் மிளகுத் தூளையும் உப்பையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். மாவை சிறு தோசைகளாக ஊற்றி, அதன் மேல் இந்த துருவல் கலவையை தூவி, லேசாக அமிழ்த்தவும். சிறிது நெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு பரிமாறவும்.
Post a Comment