வேப்பம் பொடி--பொடி வகைகள்

வேப்பம் பொடி வேப்பம் பூ summer-ரில் அதிகமாகக் கிடைக்கும். இல்லை என்றாலும் சென்னையில் அம்பிகா அப்பளம், சாரதா ஸ்டோர், நாட்டு மருந்து க...

வேப்பம் பொடி

வேப்பம் பூ summer-ரில் அதிகமாகக் கிடைக்கும். இல்லை என்றாலும் சென்னையில் அம்பிகா அப்பளம், சாரதா ஸ்டோர், நாட்டு மருந்து கடை போன்ற இடங்களில் விலை அதிகம் என்றாலும் வாங்கி, கொஞ்சம் சுத்தம் செய்து கொண்டு இந்தப் பொடியை இடித்துக் கொள்ளுங்கள். உடம்புக்கு ரொம்ப நல்லது. வேப்பிலை கட்டியே கூட பாக்கெட்டில் கிடைக்கிறது. இருந்தாலும் நாமே வீட்டில் செய்தால் ஒரு சந்தோஷம்தான். நிறையா தண்ணீர் விட்ட மோரில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியை போட்டு கலக்கி குடித்தால் தேவாமிருதம் கூட வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்கள். அநியாயத்துக்கு வெளியே எங்கேயாவது சாப்பிட்டு விட்டு வந்துட்டீங்கன்னா, நெஞ்செரிச்சல், வாயுத் தொல்லை, வயிறு உப்பி இருக்கிறது, மந்தமாய் உணருதல், food poisoning ஆகிடுமோ என்றெல்லாம் பயப்படத் தேவையில்லை. இஞ்சி எலுமிச்சை சாறில் இதை ஒரு டீஸ்பூன் போட்டு கலக்கி குடித்தால் வயிறு சாதாரணமாகிவிடும். ஒரு டவரா அளவுக்கு வேப்பம் பொடி செய்ய தேவையானவை: வேப்பம்பூ - 1 கப் வேப்பங்கொழுந்து (கிடைத்தால் அமோகம்) - ஒரு கைப் பிடி கடலைபருப்பு - 2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் நீள வற்றல் மிளகாய் - 4 பொடி பெருங்காயம்- ஒரு டீஸ்பூன் கல் உப்பு - தேவைக்கேற்ப (ஒரு டீஸ்பூன் அளவு போடலாம்) வேப்பம் பூ காய்ந்திருந்தால் பரவாயில்லை. பச்சையாய் இருந்தால் அப்படியே நிழல் உலர்த்தலாய் காய வைத்துக் கொள்ளுங்கள். வேப்பங்கொழுந்தையும் அதே போல நன்றாக அலசி உலர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். வேப்பங்கொழுந்து தொட்டால் கையில் ஒட்டுமே அந்தமாதிரிக் கொழுந்தாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் தனித் தனியாக வெறும் வாணலியில் வாசனை (தீய்ந்த வாசனை இல்லீங்க) வரும் வரை வறுத்துக் கொண்டு ஆற வைக்கவும். முதலில் கடலைபருப்பு, வற்றல் மிளகாய், பின் உளுந்து, பின் மிளகு, வரமிளகாய், கல் உப்பு கடைசியில் பெருங்காயம் மற்றும் வேப்பம்பூ, வேப்பங்கொழுந்து என்று ஒவ்வொன்றாக சேர்த்து பொடிக்கவும். புழுங்கரிசி சாதத்தில் இந்தப் பொடியை ரெண்டு ஸ்பூன் தூவி, சீரகத்தை நெய்யில் பொரித்து அதன் மேல் ஊற்றி கலந்து சாப்பிடலாம். நெய் வேண்டாம் என்றால் நல்லெண்ணெய் காய்ச்சியும் ஊற்றலாம். தணலில் சுட்ட மிளகு அப்பளம் அல்லது அரிசி அப்பளம் அருமையாக இருக்கும். தக்காளி ராய்த்தா கூட நன்றாக இருக்கும். ஜுரம், வயிற்றுக்கடுப்புக்கு சாப்பாடு பத்தியம் என்றால் தயிர் தக்காளி எல்லாம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மோர் சாதத்துக்கும் இந்தப் பொடியை தொட்டுக் கொள்ளலாம். -------------------------------------------------------------------------------------------------- வேப்பம் பொடி மணக்கிறது ஆனாலும் வேப்பிலைக்கட்டி என்பது நாரத்தை/எலுமிச்சை இலைகளுடன் தேவையான புளி-மிளகாய்-உப்பு சேர்த்து இடித்தோ/அரைத்தோ (தண்ணீர் விடாமல்) வைத்துக்கொண்டு சூடான சாதத்தில் நல்லெண்ணை விட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.தயிர் சாதத்துக்கும் நல்ல துணை.வயிற்றுக்கும் ஜீரணத்துக்கும் நல்லது. -----------------------------------------------------------------------------------------------

Related

பொடி வகைகள் 5341210328092879809

Post a Comment

2 comments

Govind said...

chennai yil vEppilai katti enbathu

Nartha iLai podi

MohamedAli said...

appadiya,Thanks By A.S.Mohamed Ali

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item