முட்டை,,பட்டாணி,பொரியல்,---சமையல் குறிப்புகள்
முட்டை,,பட்டாணி,பொரியல், தேவையான பொருள்கள் முட்டை - 4 பட்டாணி - 200 பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 மிளகுப்பொடி - 1 டேபிள் ஸ்பூன் எண...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_1635.html
முட்டை,,பட்டாணி,பொரியல்,
தேவையான பொருள்கள்
முட்டை - 4
பட்டாணி - 200
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகுப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
பட்டாணியை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
முட்டையுடன் உப்பு, மஞ்சள் பொடி போட்டு அடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி நன்கு வதங்கியவுடன் அடித்து வைத்துள்ள முட்டை போட்டு நன்கு கிளறவும்.
முட்டை நன்கு வெந்தவுடன் வேக வைத்த பட்டாணி, மிளகுப்பொடி போட்டு சிறிது நேரம் கிளறி இறக்கவும்
Post a Comment