பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்--
ஒரு இல்லம் நல்லறமாய் அமைவது என்பது, அக்குடும்பத்தை நிர்வகிக்கும், குடும்பத் தலைவரை விட, தன்னையும் தனது கணவர் குடும்பத்தோரையும், தனது கு...

பெண்கள் சாதாரணமாக 12 முதல் 16 வயதிற்குள் பூப்பெய்வது இயற்கையானது. ஒரு சில பெண்களுக்கு 18 வயது கூட ஆவதுண்டு. அவர்கள் 18 வயதிற்கு மேல் பூப்படையாததிற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் இரத்த சோகை, உடல் பலவீனம், குடும்பப் பாரம்பரிய உடல் சம்பந்தப்பட்ட பாதிப்பு என பல்வேறு காரணங்களும் அடங்கும். அத்தகைய பெண்களுக்கு நமது தாயகத்தில் குப்பைமேனி இலையை இடித்து எடுத்து, சாறெடுத்து, அச்சாற்றில் இரண்டு ஸ்பூனுக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து அருந்தக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறோம். இதற்கு இயற்கை மருத்துவ வகைகளின் சோற்றுக் கற்றாழையிலிருந்து தயாரிக்கப்பட்ட Aloe எனும் இயற்கை மருந்து.
பருவமடைந்த பெண்கள் மாதம்தோறும் மாதவிடாய் ஆவது சாதாரண நிகழ்ச்சியாகும். அவ்வேளைகளில் வயிற்று வலி அல்லது அதிக உதிரப்போக்கு, மயக்கம், களைப்பும், சோர்வும் பொதுவாக ஏற்படுவது உண்டு. இத்தகைய தொல்லைகள் ஏற்பட்டால் அதற்கான எளிய சிகிச்சை முறையாக பினவரும் முறையில் தயாரித்து நம் வீட்டிலேயே பயன்படுத்தலாம்.
வயிற்று வலி ஏற்பட்டால் 20 மிளகு, தோல் உரித்த வெள்ளைப் பூண்டின் பற்கள் 10 இரண்டையும் மாவிலங்கப்பட்டையில் கொட்டைப்பாக்கு அளவு சேர்த்து அம்மியில் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சிறிது வென்னீருடன் அருந்த வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.
அதுபோன்ற இத்தகைய கோளாறு உள்ளவர்கள் அவர்கள் அருந்தும் நீரில் வெங்காயப்பூக்களைப் போட்டு ஊற வைத்துக் குடிநீராகப் பயன்படுத்த எல்லாத் தொல்லைகளும் நீங்கும். வெங்காயப் பூக்கள் 100 கிராம் எடுத்துச் சுத்தப்படுத்தி வெய்யிலில் சருகுபோல் காய வைத்து, இடித்து சலித்து சூரணமாக்கிக் கொண்டு ஒரு நாளைக்கு அரை ஸ்பூன் வீதம் சூரணத்தை வாயிலிட்டு, சோயா பாலைக் காய்ச்சி அருந்தி வர மாதவிடாய் தொல்லை நீங்குவதோடு, கருப்பையும் பலப்படும்.
திப்பிலி, பெருங்காயம், இந்துப்பு வகைக்கு 25 கிராம் எடுத்து, திப்பிலியை வறுத்து, பெருங்காயத்தை பொரித்த பின் மூன்றையும் சேர்த்து இடித்து சலித்து சூரணமாக்கிக் கொண்டு, இரண்டு ஸ்பூன் வீதம், ஒரு நாளைக்கு இரு வேளையாக ஒரு வாரம் அருந்த, சூதக வாய்வு மற்றும் பிற தொல்லைகளும் நீங்கும். மேலும் சம்பங்கிப் பூவுடன் தேன் கலந்து தண்ணீர் விட்டு சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து, 10 நாட்கள் வரை அருந்தலாம். சில பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பும், பின்பும் தாங்க முடியாத வயிற்று வலி ஏற்படுவது உண்டு. அவர்கள் கல்யாண முருங்கை இலையைச் சாறு எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும், பூரண மாதவிடாய் சரிவர வராமல் பல தொல்லைகளை ஏற்படுத்துவதும் உண்டு அதைப்போன்றே சில சமயங்களில் பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகள் காரணமாய் இரண்டொருநாட்கள் தள்ளிபோவதற்கும் விரும்புவார்கள். இயற்கை மருத்துவ முறையில் அதற்கான ஒருசில ஆயுர்வேத மருந்துகள் ஆயுர்வேதம் மற்றும் சித்த வைத்தியத்திலும் இருப்பதால் அவை தரப்படுகின்றன.
கர்ப்ப காலக் கோளாறுகள் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு இரண்டாம் மாதத்தில் குமட்டலும் வாந்தியும் இருப்பது பொதுவாகவே சாதாரணமானது தான். இது ஒரு வகையில் கருவுற்றிருப்பதற்கான அடையாளமாகும். ஆனால் ஒரு சிலருக்கு வாந்தி (சத்தி) அதிகமாக ஏற்பட்டுத் தொல்லை கொடுக்கும் அவர்களுக்கு 5 கிராம் கிராம்பை எடுத்து தட்டி ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு 200 மி.லி. தண்ணீர் விட்டு பாதியாகச் சுண்டுமளவுக்கு கஷாயமாக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு ஒரு ஸ்பூன் வீதம் சிறிது சர்க்கரையும் சேர்த்து மூன்று வேளை அருந்தினால் வாந்தி நின்றுவிடும்.
நீடித்த குமட்டலும் வாந்தியும் இருக்குமானால் கிராம்பு 10 கிராம், நெல்லிக்காய் வற்றல் 5 கிராம் எடுத்து இரண்டையும் தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மூன்று பெரிய தேசிக்காய் பழத்தின் சாற்றைப் பிழிந்து அரை நாள் ஊற வைக்க வேண்டும். பிறகு சாற்றை வடித்து விட்டு அடியில் தங்கியுள்ள வண்டலை எடுத்து மை போல அரைத்து அடையாகத தட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு, குமட்டல் அல்லது வாந்தி ஏற்படும்போதெல்லாம் இந்த அடையில் சிறிது பிட்டு வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் போதும், இவ்வாறு ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை கூடச் செய்யலாம். குமட்டல் குணமாகும், அதே சமயம் ஜீரண சக்தியை அளிக்கும்.
மற்றொரு வகையில், முன்னாள் இரவு ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விட்டு அதில் இரண்டு ஸ்பூன் சுண்ணாம்பைப் போட்டு நன்றாகக் கலக்கி மூடி வைத்து விட வேண்டும். மறுநாள் காலை சுண்ணாம்பு நீர் நெளிந்திருக்கும். அதில் ஒரு ஸ்பூன் நீரை எடுத்து ஒரு டம்ளர் காய்ச்சிய சோயா பாலில் கலந்து ஒரு வாரம் தொடர்ந்து அருந்த வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற அனைத்துத் தொல்லைகளும் நீங்கும். வாயில் எச்சில் ஊறல் சில பெண்களுக்கு வாயில் எச்சில் ஊறுவது அதிகமாக இருக்கும். இது சரிவர சாப்பிடாததினால் ஏற்படும் ஒரு கோளாறு அது நீங்க வறுத்த காப்பிக் கொட்டையில் ஒன்று இரண்டை வாயிலிட்டு அடக்கி வைத்துக் கொண்டு அதில் ஊறும் நீரை உள்ளுக்கு அருந்தலாம். விரும்பினால் கடைசியில் காப்பிக் கொட்டையை மென்றும் சாப்பிடலாம்.
கால் வீக்கம் கர்ப்பமுற்ற பெண்களின் சிலருக்கு ஏழு மாதங்களுக்குப் பின் கால்களில் வீக்கம் தோன்றும். அத்துடன் தொடைகளும் மர்ம உறுப்பும் வீங்கித் தொல்லை கொடுப்பதுண்டு.
அப்போது எப்சம் உப்பு என்று அழைக்கப்படும் இந்துப்பையும் மஞ்சளையும் எடுத்து சேர்த்து சுடு நீரில் போட்டு கலக்கி கால்கள் இரண்டும் (ஒரு வாளியில்) உட்புறம் வைத்து நீவி விட்டு தடவிக் கொள்ளவும். Tree OIl இங்கு உள்ள பாடி ஷாப்பில் விற்கப்படுவதால், அதையும் வாங்கி உபயோகிக்க பலன் கிடைக்கும். கத்தாழையை வெட்டி பொடி செய்து வீங்கிய இடம் முழுவதும் படுக்கப் போகும் முன் பூசி, மறுநாள் கழுவி விட இரவு நல்ல நித்திரையும் பெறலாம், நிவாரணமும் கிடைக்கும்.
அசதி - களைப்பு கருவுற்ற பெண்களில் ஒரு சிலருக்கு எப்பொழுதும் அசதியும் களைப்புமாக இருக்கும். எந்த வேலையிலும் மனம் செய்யாது, எப்பொழுதுமே படுத்துக் கொண்டே இருக்க விரும்புவார்கள்.
அதற்கு ஒரு வெள்ளைப் பூண்டை உரித்து, அதன் பற்களை நசுக்கி அத்துடன் ஒரு சுண்டு விரல் நீளமுள்ள மஞ்சளையும் உடைத்து இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்ட சிவக்க வறுத்து, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி, கஷாயமாக்கி குடிநீர் போல தனியாகவோ, சர்க்கரை சேர்த்தோ கொஞ்சம் கொஞ்சமாக நான்கு ஐந்து வேளைகள் குடித்து வரலாம். இதனால் அனைத்து சோம்பலும் களைப்பும் நீங்கும்.
உதிரப் போக்கு கருவுற்ற காலத்தில் சாதாரணமாக உதிரப் பெருக்கு இருக்கக்கூடாது. அப்படி இருப்பின் அதிமதுரம், சீரகம் எடுத்து தட்டி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு பாதியாகச் சுண்டக் கஷாயமாக்கி காய்ச்சி வடித்து ஒரு வேளைக்கு இரண்டு ஸ்பூன் வீதம் மூன்று வேளையாக மூன்று நாள் அருந்த உதிரப் போக்கு நிற்கும். அல்லது வல்லாரை, வெள்ளை வெங்காயம், சீரகம் வகைக்கு 25 கிராம் எடுத்து தட்டி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் கஷாயமாக்கி முன்கூறியபடி அருந்தினால் போதும். உதிரம் நிற்கும். உதிரப் போக்கு ஏற்படும் காலங்களில் இத்தகைய மருந்து உட்கொள்ளும் நாட்களில் புளி, கடுகு, நல்லெண்ணெய் இன்றி பத்திய உணவு அருந்துதல் அவசியமாகும்.
Post a Comment