ஜவ்வரிசி பேரிட்சை பாயாசம்--சமையல் குறிப்புகள்
ஜவ்வரிசி பேரிட்சை பாயாசம் தேவையானவை ஜவ்வரிசி - 50 கிராம் பேரிட்சை - 5 பால் - 2 டம்ளர் நட்ஸ் வகைகள் - 50 கிராம் (பாதம் பிஸ்தா,முந்திரி,கிஸ்ம...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_11.html
ஜவ்வரிசி பேரிட்சை பாயாசம்
தேவையானவை
ஜவ்வரிசி - 50 கிராம்
பேரிட்சை - 5
பால் - 2 டம்ளர்
நட்ஸ் வகைகள் - 50 கிராம்
(பாதம் பிஸ்தா,முந்திரி,கிஸ்மிஸ்)
கண்டென்ஸ்ட் மில்க் - சிறிய டின்.
நெய் - ஒரு மேசைகரண்டி
சாப்ரான்(குங்குமப்பூ) - சிறிது
செய்முறை
ஜவ்வரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பாலை காய்ச்சி ஆறவைக்கவும்.
இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்கவிட்டு கொதி வரும் போது ஜவ்வரிசி சேர்த்து வேகவிடவும்.
பேரிட்சையை கொட்டையை நீக்கி ஆறிய பாலுடன் சேர்த்து அரைத்து வைக்கவும்.
ஜவ்வரிசி வெந்ததும் அரைத்துவைத்திருந்த டேட்ஸ் பாலை சேர்த்து நட்ஸ்வகைகளை நெயில் வறுத்து சேர்த்து சிறிது குங்குமபூ தூவி விடவும்.
Post a Comment