வாழைக்காய் தோல் பொரியல்--சமையல் குறிப்புகள்
வாழைக்காய் தோல் பொரியல் தேவையானவை வாழைக்காய் தோல்- 2 டம்ளர் சாம்பார்பொடி- 2 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு காயம்- சிறிதளவு எண்ணெ...

தேவையானவை
வாழைக்காய் தோல்- 2 டம்ளர் சாம்பார்பொடி- 2 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு காயம்- சிறிதளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் கடுகு- 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன் சீரகம்- 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை- 1 இணுக்கு
செய்முறை:
1. வாழைக்காயை நன்றாக அலம்பி, தோலைச் சீவி தனியே வைத்துக் கொள்ளவும். வாழைக்காயைப் பொரியலாகச் செய்வது போல் அதன் தோலையும் வீணாக்காமல் பொரியலாகச் செய்து அசத்தலாம். 2. மிகவும் பொடியாக வாழைக்காய் தோலைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். 3. அடுப்பில் எண்ணெய்யிட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளைஉளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்து கொண்டு கடுகு வெடித்தவுடன் சீரகத்தைப் போட்டு வதக்கி விடவும். 4. வாழைக்காய் தோல்களை தாளித்தவற்றுடன் போட்டு உப்பு போட்டு தண்ணீர் தெளித்து வேக விடவும். 5. தோல் வெந்ததும் சாம்பார்பொடி, காயம் சேர்த்து திறந்து வைத்துக் கிளறி வரவும். அடிப்பிடிக்காமல் இருக்க எண்ணெய் இட்டு வரவும். 6. காய் வெந்தவுடன் பாத்திரத்திற்கு மாற்றவும். துவர்ப்புச் சுவையுடன் இருக்கும் இந்த வித்தியாசமான பொரியல் மோர்க்குழம்பு, தீயல், சாம்பார், ரசம் என்று எவ்வகை குழம்பு, ரசத்திற்கும் சரியான ஜோடியாக இருக்கும்.
Post a Comment